பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



94 உடல் தளச்சியினால் தாங்க முடியாமல் போட்டு விட்டார். உண்மைத் தொண்டராகிய இவ்வடிகளது வறுமை ஒழியுமாறு, பஞ்சம் நீங்கும் வரையில் சிவபெருமான் நாள் தோறும் இவருக்கு ஒரு பொற்காசு அளித்து வந்தனர். படிக்காசு பெற்ற புகழ்த்துணையார் இறைவன் திருவருளை நினைந்து நினைந்து மனம் உருகித் தம் திருத்தொண்டை முட்டின்றிச் செய்துவந்தார். பஞ்சமும் நீங்கிற்று. எந்நாளும் திருத்தொண்டை வழாது புரிந்துவந்த இவ்வடிகள், இறுதியில் சிவபதம் எய்தினர். இவ்வரலாற்றைப் பெரிய புராணத்திற் காணலாம். திருத்தொண்டர் திருவந்தாதியின் ஆசிரியராகிய நம்பியாண்டார் நம்பியும், பெரிய புராணத்தின் ஆசிரியராகிய சேக்கிழாரடிகளும், புகழ்த்துணைநாயனார் அவதரித்துத் தொண்டு புரிந்த இறைவன் திருவடியையடைந்த திருப்பதி செருவிலிப் புத்தூர் என்று தம் நூல்களில் கூறியுள்ளனர். இதனை , 100 'செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையஞ் சிறுவிலைத்தா உருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனஞ்செய் தருவதோர் போதுகை சோர்ந்த கலசம் விழத்தரியா தருவரை வில்லி அருளின் நிதியது பெற்றனனே' திருத்தொண்டர் திருவந்தாதி, பா.67. 'செருவிலிபுத் தூர்மன் னுஞ்சிவமறையோர் திருக்குலத்தார் அருவரைவில் லாளிதனக் ககத்தடிமை யாமதனுக் கொருவர்தமை நிகரில்லார் உலகத்துப் பரந்தோங்கிப் பொருவரிய புகழ்நீடு புகழ்துணையார் எனும் பெயரார்' பெரிய புராணம், புகழ்த்துணைநாயனார் புராணம். பா.1. என்ற பாடல்களால் இனிதுணரலாம். புலவர் பெருமான்களாகிய இவ்விருவரும் இங்ஙனம் கூறியிருக்க, சந்தானாசாரியருள் ஒருவராகிய கொற்றங்குடி உமாபதி சிவனார், தாம் இயற்றியுள்ள திருத்தொண்டர் புராண சாரத்தில் புகழ்த்துணையாரது திருப்பதி அழகார் திருப்புத்தூர் என்று குறித்துள்ளனர்.' எனவே, செருவிலிபுத்தூருக்கு அழகார் திருப்புத்தூர் என்ற பெயரும் உண்டு போலும். ஆனால் செருவிலிபுத்தூர் என்ற 1. புண்ணியர்கள் புகழ் ஆழகார் திருப்புத் தூர்வாழ் புகழ்த்துணையார். (அகத்தடிமைப் புனிதர்சின்னாள் மண்ணிகழ மழைபொழியா வற்காலத்தால் வருந்துடலம் நடுங்கிடவு (மணிநீரேந்தி அண்ணல் முடி பொழிகலசம் முடிமேல்வீழ அயர்ந்தொருநாள் (புலம்பவரள் அருளாவீந்த நண்ணலரும் ஒருகாசுப்படியால் வாழ்ந்து நலமலிசீர் அமருலகம் (நண்ணீனாரே திருந்தொண்டர் புராணசாரம்.பா.61.