பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



96 திருத்தொண்டு புரிந்து இறைவன்பால் - படிக்காசு பெற்ற புகழ்த்துணையாரைத் தம்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகள் 'அரிசிற் புனல்கொண்டு வந்தாட்டுகின்றான்' என்று அரிசிலாற்றையும் குறித்திருப்பது உணரற்பாலதாகும். திருஞானசம்பந்த சுவாமிகளும் தமது அரிசிற்கரைப்புத்தூர்ப் பதிகத்தில், 'அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப் i புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே', என்று புகழ்த்துணையார் இத்தலத்திற் செய்த திருத்தொண்டைப் பாராட்டியுள்ளனர். ஆகவே, சைவசமய குரவர்களாகிய திருஞானசம்பந்தராலும், சுந்தரமூர்திகளாலும் குறிக்கப்பெற்றதும், இக்காலத்தில் அழகாப்புத்தூர் என்று வழங்கப்படுவதும் ஆகிய அரிசிற்கரைப்புத்தூரே அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய புகழ்த்துணைநாயனாரது திருப்பதி என்பது நன்கு விளங்குதல் காண்க.