பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



111 விழுங்குயிருமிழ்ந்தனை - என்று இறந்தகாலத்திற் கூறியிருத்தலே, புறம்பயத்துறையிறைவன் அரவாலிறந்தவணிகனுக்கு ஆருயிரீந் தருளியது சுவாமிகள் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகட்கு முன்னரே யென்பதற்குத் தக்க சான்றாகும். இதுகாறுங் கூறியவாற்றால், திருப்புறம்பய புராணத்திற் சொல்லப்பட்டிருப்பதே வன்மையுடைத் தாதலறிக. 2. திருவிளையாடற் புராணமுடையார் வன்னி, கிணறு, - இலிங்கமாகிய மூன்றுமே அவ்வணிகமாதின் மன்றற்குரியசான்றுகள் எனக் கூறியிருக்கின்றனர். திருப்புறம்பயபுராணமுடையார் மடைப்பள்ளியுஞ்சேர்த்து நான்கென்கின்றனர். பண்டைத்தமிழ் நூலாகிய சிலப்பதிகாரத்தில் தன்மன்றற்குச் சான்றாக மடைப்பள்ளியும் அவ்வணிகமாதாற் காட்டப்பட்ட தென்று கூறப்பட்டிருக்கிறது. இதனால், திருப்புறம்பய புராணமுடையார் கூற்று வன்மையுடைத்தென்பது நன்கறியக்கிடக்கின்றது. ஆனாற் சிலப்பதிகாரமியற்றியருளிய ஆசிரியர் இளங்கோவடிகள் அம்மாது, வன்னியும் மடைப்பள்ளியும் தன்மன்றற்குச் சான்றாகக் காட்டினாரென்றுரைத்து எஞ்சியவிரண்டையுங் கூறாது விடுத்தமைக்குக் காரணம் தற்காலத்திப் புலப்படவில்லை . 11. - மறம்பயமலைந்துவர்மதிற்பரிசுறுத்தனை நிறம்பசுமை செம்மையொடிசைந்துன துநீர்மைத் திறம்பயனுறும்பொருள் தெரிந்து ணருநால்வர்க் கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய். திருஞானசம்பந்தர் - திருப்புறம்பயப்பதிகம் -1-வது பாசுரம். ஈண்டு புறம்பயமதனிலறம்பலவருளியும் என்னும் ஸ்ரீமத் - மாணிக்க வாசகசுவாமிகள் அருமைத் திருவாக்கை நோக்குக. 12. விரிந்தனைகுவிந்தனைவிழுங்குயிருமிழ்ந்தனை திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும் பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகுமயானம் புரிந்தனைமகிழ்ந்தனை புறம்பயமமர்ந்தோய். திருஞானசம்பந்தர் - திருப்புறம்பயப்பதிகம் - 3-வது பாசுரம். 13. திருவிளையாடற்புராணம் 64 வது படலம் 31. 14. அன்னதன்மையின் மதுரையிற்போந்து நின்னருளாற் பின்னர் நன் மணம்புரிகுதுமென்றதும் பெரியோன் வன்னிவன்னிசேர்மடைப்பளிமலிபுனற்கூறு மின்னநம்வடிவிவையெலாங்கரியென வெண்ணி. திருப்புறம்பய புராணம் 6வது சருக்கம் 41. புதுமணந்தனையாழினோர் தன்மையிற்புணர்வீர் முதியபுன்மொழிகிளையினோர் மொழிந்திடுநாளின் மதுரையம்பகுதியிவையுடன் கூடயாம்வந்தே வுதவிச்சாக்கியங்குணர்த்துவதுண்மையென்றுரைத்தார். ஷ ஷே 42, 15. வஞ்சினமாலை - 5, 6.