உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



112 3. வணிகமாது பிறந்த நகரம் கடற்புறத்துள்ள ஒருபட்டினம் என்று திருவிளையாடற் புராணத்திற் சொல்லப்பட்டிருக்கிறது." திருப்புறம்பய புராணத்திலோ காவிரிப்பூம்பட்டினமென்று கூறப்பட்டிருக்கிறது." இதற்கு ஒருசாரார் கூறம் சமாதனமாவது தற்காலத்துப் 'பட்டினம்' என்பது அநேகபட்டினங்களிருப்பச் சென்னையை மாத்திரங் குறிப்பது போல், பண்டைக்காலத்திற் 'பட்டின மென்பது காவிரிப்பூம்பட்டினத்தையே குறித்ததாகலின் - மேற்கூறிய இருபுராணங்களும் இவ்விஷயத்தில் முரணவில்லையென்பதேயாம். இனி இவர்கள் கூற்றை யங்கீகரித்துக்கொண்டு, வேறு நூல்களில் இதைப்பற்றி ஏதாவது சொல்லப்ட்டிருக்கிறதாவென்பதை யாராயுங்காற் சிலப்பதிகாரமும் (அம்மங்கை பிறந்த நகரம்) காவிரிப்பூம்பட்டின மென்று கூறுவதாக வெளியாகின்றது.16 இதனால் அம்மங்கைபிறந்த நகரம் காவிரிப்பூம்பட்டினமென்பது நன்கு புலனாகின்றது. - இதுகாறும் என் சிற்றறிவுக்கெட்டியவரை யான்செய்த ஆராய்ச்சியால், திருவிளையாடற் புராணத்திலும் திருத்தொண்டர் புராணத்திலும் கூறப்படுஞ்சரிதங்களிரண்டும் வெவ்வேறென்பதும், திருஞானசம்பந்தசுவாமிகள் அரவாலிறந்தவணிகனுக்கு ஆருயிரளித் தருளினாரென்று திருவிளையாடற்புராணங்கூறுவது ஆராய்ச்சியிற் சிறிதும் பொருந்தவில்லையென்பதும், புறம்பயத்துறையிறைவனே அங்ஙனஞ்செய்தருளினாரென்று திருப்புறம்பயபுராணங்கூறுவதே வன்மையுடைத்தென்பதும், மன்றற்குக்காட்டப்பட்ட சான்றுகள் மடைப்பள்ளியுடன் நான்கென்பதும், அவ்வணிகமாது பிறந்தநகரம் காவிரிப் பூம்பட்டினமென்பதும் விளங்கி நிற்றல் காண்க. - 17. திருவிளையாடற்புராணம் 64-வது படலம்.2. பற்பலவைகல்கழிந்தபின்னெவரும்பழிச்சிடும் பூம்புகார்வசியன் பொற்புளநாகமங்கையர் தாழப்பூதல மடந்தையர்பரவ வற்புதவானத்தரம்பையர் நாணவழகொருவடிவெடுத்தளைய -- கற்பகம்படர்ந்தகாமர்பூங்கொடியிற் கன்ளியையரிதினிற் பயந்தான். ஷெ ஷே 19. 18. சிலப்பதிகாரம் வஞ்சினமாலை 5 முதல் 35வரை, (அடிகள்)