உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



117 25. கல்லாடமும் அதன் காலமும் கல்லாடம் என்பது ஆலவாயுறை இறைவனைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அகப்பொருட்டுறையில், கல்லாடரென்னும் ஒரு நல்லிசைப் புலவராலியற்றப்பட்ட தோரரிய நூல். இது கடவுள்வாழ்த் தோடு நூற்று மூன்று ஆசிரியப்பாக்களையுடையது; சொல்லழகும் பொருளழகும் ஒருங்கே வாய்ந்தது. இவ்வரிய நூலியற்றினோர் மதுரையம்பதியில்விளங்கிய கடைச்சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராய கல்லாடனாரென்பர் ஒருசாரார். இதற்கு அன்னோர் எடுத்துக்காட்டும் பிரமாணம் இந்நூலின் சிறப்புப்பாயிரச் செய்யுட்களேயாம். அச்செய்யுட்களை யடியில் வரைகின்றேன். வாய்ந்தபொருட்கொருபொருளாய்க்கலைவாணிக்கருள் கொழிக்கு மன்பர்ப்பாரி வாய்ந்தமுதுதமிழ்வடித்துக்கல்லாடமெனவொருநூ லருளியிட்டார் தேய்ந்த மதிச்சடைப்பரமர்கருணை பெறச்சங்கமுது செல்வர்வாழ்த்தக் காய்ந்த புலனடக்கியுயர் பெருஞானம்பழுத்தருள்கல் லாடனாரே. கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறுநூல் வல்லார் சங்கத்தில் வதிந்தருளிச் - சொல்லாயு மாமதுரையீசர் மனமுவந்து கேட்டுமுடி, தாமசைத்தார் நூறு தரம்.* மற்றொருசாரார், இந்நூல் சங்கமருவிய நூல்வரிசையிற் சேர்க்கப்பெறாமையால், கடைச்சங்கப்புலவராய கல்லாடனார் இயற்றியதன்றென்பர். அன்றியும், சைவசமயாசாரியராகிய மணிவாசகப்பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருச்சிற்றம் பலக்கோவையார், அகப்பொருளியலுக்கு மாறுபடுகின்றமையின் குற்றமுடைத்தென்று கடைச்சங்கப் புலவர்கள் கூறிய கடுமொழியைக் கேட்கப் பெறாது, அன்னோர்கூற்றை மறுத்து, அப்புலவர்களோடு முரண்பட்ட கல்லாடர் என்பார் ஆலவாயில் அருட்பெருங்கடவுளின் றிருவருள் பெற்றுத் திருச்சிற்றம்பலக் கோவையாரின் மாட்சியுந் தெய்வத்தன்மையும் அன்னோர்க்கு நன்கு புலப்படுத்துவான்,

  • இது, கரந்தைத்தமிழ்ச் சங்கத்தின் நான்காவதாண்டு நிறைவுவிழாவில் சிதம்பரம் மகா - ரா - ஸ - ஸ்ரீ திவான்பஹதூர் சா.இரா.மு. இராமசாமிச் செட்டியார் அவர்கள் அக்கிராசனத்தின் கீழ் நடைபெற்ற சபையிற் படிக்கப்பட்டது.