பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



118 அந்நூலினின்று ஒருநூறு செய்யுட்களைத் திரட்டி அவற்றின் கருத்துக்களகப்பட இந்நூலையியற்றி, அப்புலவர்களைக் கூட்டிச்சென்று, இறைவன்றிருமுன்னர் ஓதிய போது அப்பெருமான் சாலமகிழ்ந்து, ஒவ்வொருபாவும் முடியுந்தோறும் தந்திருமுடியைத் துளக்கி யருளினாரென்றுஞ் சிலர் கூறுப. இக்கூற்றை மேலேவரைந்துள்ள வெண்பா ஆதரிக்கின்றது. ஆனால் கடைச்சங்கப் புலவர்கள் திருச்சிற்றம்பலக் கோவையார் குற்றமுடைத்தென்று கூறினரென்பது சிறிதும் பொருந்த வில்லை; எங்ஙனமெனில் மணிவாசகப் பெருமான் கடைச்சங்க காலத்திற்குப் பிந்தியவர்களென்பதற்குப் பிரமாணம் அவர்கள் வாக்கினின்றே நாம் காட்டலாம். * அன்றியும், திருச்சிற்றம்பலக் கோவையார்க்குச் சிறந்த வுரைவரைந்த புலவர்பெருமானாகிய பேராசிரியரும் தமது அரியவுரையில், இச்செய்தியைக் கூறினாரில்லை. இனி, இந்நூலாசிரியர் கடைச்சங்கப்புலவருள் ஒருவராய கல்லாடனாரா? அல்லது அப்பெயரேதரித்துப் பிற்காலத்துவிளங்கிய வேறு பெரியோரா? என்பதே ஈண்டு ஆராயவேண்டிய விஷயமாம். இந்நூலுடையார் கடைச்சங்க காலத்து நிகழ்ந்துள்ள சில நிகழ்ச்சி களைத் தம் நூலில் குறித்திருக்கின்றனர். அவை கேட்டார்ப் பிணிக்குந்தகையவாய் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கீழே தருகின்றேன். “எழுமலையொடித்த கதிரிலைநெடுவேல் வள்ளிதுணைக்கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த கறங்குகாலருவிப் பரங்குன்றுடுத்த பொன்னகர்க்கூடற் சென்னியம்பிறை யோன்

  • சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்து மென்சிந்தையுள்ளு முறைவானுயர்மதிற் கூடலினாய்ந்த வொண்டீந்தமிழின் றுறைவாய்நுழைந் தனையோவன் றியேழிசைக்சூழல்புக்கோ

விறைவாதடவரைத் தோட்சென்கொலாம்புகுந் தெய்தியதோ என்னுந் திருக்கோவை யாரிற் காணப்படும் இச்செய்யுளில் மணிவாசகப்பெருமாள் கூடன் மாநகரில் நிலவிய கடைச்சங்கத்தைக் குறித்திருக்கின்றனர். முந்தியசங்கங்களிரண்டும் கடலாற் கொள்ளப் பட்ட தென்மதுரையகத்தும் கபாடபுரத்தும் விளங்கியமையால், கூடலில் 'ஒண்டீந்தமிழாய்ந்த' சங்கம் கடைச்சங்கமாகத்தா னிருத்தல் வேண்டும். அன்றியும் 'ஆய்ந்தவொண்டீந்தமிழ்' என்னுஞ் சொற்றொடரினால் சுவாமிகள் காலத்து அச்சங்கம் நடைபெறவில்லை யென்பதும் நன்குவிளங்கும். நிற்க, காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபெஸர் சுந்தரபிள்ளை அவர்கள் னூ. தி. கூன்பாண்டியனும் திருஞானசம்பந்த சுவாமிகளும் கி. பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கியவர்களென்று நிரூபணஞ் செய்துள்ளனர். இக் கூன்பாண்டியற்குப் பத்துத்தலைமுறைகட்கு முன்னிருந்த அரிமர்த்தன பாண்டியனே நம் மாணிக்கவாசக சுவாமிகளை மந்திரியாகக்கொண்டவனென்பது திருவிளையாடற் புராணத்தா லறியப்படுகிறது. தலைமுறை ஒன்றிற்குச் சராசரி ஆட்சிக் காலம் 25 வருடமாக 10 தலைமுறைகட்குச் சென்றது 250 வருடங்களாம். இவ்விரு நூற்றைம்பதைக் கூன்பாண்டியன் காலமாகிய அறுநூற்று முப்பதில் கழிக்க எஞ்சியது முந்நூற்றெண்பதாம். இதனால், மாணிக்கவாசக சுவாமிகளும் அரிமர்த்தன பாண்டியனும் கி.பி. நான்காம் நூற்றாண்டினிறுதியில்' விளங்கியவர்களென்பது புலப்படுதல் கண்டுகொள்க.