பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



141 குருகுலங்களுமே, அந்நியர் ஆட்சியில் தாழ்வுற்றிருந்த நம் தாய் மொழியைக் காப்பாற்றிவந்தன என்று உறுதியாகக் கூறலாம். நாட்டில் ஆங்காங்கு வாழ்ந்து கொண்டிருந்த பரம்பரைச் செல்வர்களும் பாலாசிரியன்மார்களாகிய அப்புலவர்களின் தன்னலமற்ற தொண்டினைப் போற்றி அன்னோரைப் புரந்துவந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நம். நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டு, அதன் பயனாக அரசாங்க உதவிபெற்ற ஆரம்பப் பள்ளிக் கூடங்கள் தோன்றிய காலத்தேதான் வீரசைவப் புலவர்கள் - நடத்திவந்த பழைய பள்ளிக்கூடங்கள் மறைந்துபோயின. . அப்பள்ளிக்கூடங்கள் மறைந்த பின்னர், தமிழறிஞர்களைக் கிராமங்களில் காண்பது அரிதாயிற்று. அங்கிருந்த இளைஞர்களுள் ஆர்வமுடையவர்கள், தமிழ்ப் புலமை பெறுவதற்கும் இடமில்லாமற் போயிற்று. பிறகு, ஆங்கிலமே முதல் மொழியாகக் கற்பிக்கப்படும் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் நம்நாட்டில் ஆங்காங்கு அரசாங்க வுதவிகொண்டு அமைக்கப்பெற்றன. அவற்றில் கல்வி - பயின்ற மாணவர்கள், ஆங்கில மொழியை நன்கு கற்றுத் தேர்ச்சி எய்திப் பட்டமும் பதவியும் பெற்றுத் தம் தாய்மொழியாகிய தமிழில் பற்றும் பயிற்சியும் - இல்லாதவர்களாகப் போய் விட்டனர். அவர்கட்குப் பண்டைத் தமிழ்நூல்களைப் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காமற் போயினமையால் அன்னோர் பண்டைத் தமிழரின் பண்பாடு, நாகரிகம், வீரம் முதலானவற்றை அறியாதவர்களாகவே யிருந்து கொண்டு நம் தமிழகத்தில் தம் வாழ்க்கையை நடத்திவிட்டனர். இக்குறைபாடு, தம் தாய்மொழி இலக்கியங்களைப் படிக்காமல் அந்நிய மொழி நூல்களை மாத்திரம் கற்று அவற்றில் ஈடுபாடுடையவர்களாயிருந்தமையால் உண்டாயிற்று என்பது தேற்றம். இவ்வுண்மையை, ‘ஆங்கிலம் ஒன்றையே கற்றார் அதற்கு ஆக்கையோ டாவியும் விற்றார் தாங்களும் அந்நிய ரானார் செல்வத் தமிழின் தொடர்பற்றுப் போனார்' என்று ஓர் அறிஞர் கூறி வருந்தி யிருத்தலாலும் நன்கறிந்து கொள்ளலாம். இதனையுணர்ந்த பெரியோர் சிலர் இத்தகைய நிலைமை இனி ஏற்படாதவாறு தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஆதரவும் தேட முற்பட்டனர். அவர்களது அரிய முயற்சியினால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று கூறலாம். இண்டர்மீடியேட், பீ.ஏ. வகுப்புக்களுக்குத் தமிழ்ப் பாடங்கள் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றியும், தமிழ் வித்வான் தேர்வும் ஏற்படுத்தப்பட்டது. அத்தேர்விற்குப் பயிற்சியளிக்கும் பொருட்டுத் தமிழ்க் கல்லூரிகளும் சில ப