உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- 142 ) இடங்களில் அமைக்கப் பெற்றன. அவற்றுள் மயிலத்தில் நிறுவப்பெற்றுள்ள ஸ்ரீ சிவஞான பாலய தேசிக சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரி, யாவரும் பாராட்டற்குரிய பெருமையுடையதாகும். இக்கல்லூரியை மயிலத்தில் அமைத்துச் சிறப்பாக நடத்திவருபவர்கள் பொம்மபுரம் ஆதீனத் தலைவர்களாகவுள்ள ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய தேசிக சுவாமிகளவர்களேயாவர். இவர்கள் தம் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ்ப் புலமையோடு நல்லொழுக்கமும் தெய்வ பத்தியும் அமையுமாறு தக்க பயிற்சியளித்து வருவது எல்லோரும் போற்றுதற்குரிய அருஞ் செயலாகும். இவர்களுடைய செயற்கரிய செயல்கள், முன்னர் ஊருக்கொரு குடியினராயிருந்துகொண்டு பல ஊர்களில் தமிழ் வளர்த்துவந்த வீரசைவப் புலவர்களின் அருந்தொண்டுகளை இந்நாளில் நம்மனோர்க்கு நினைப்பூட்டி மகிழ்விக்கின்றன எனலாம். இவர்களுடைய தமிழ்த்தொண்டையும், சமயத்தொண்டையும் நம் தமிழ்நாடு என்றென்றும் மறவாமல் போற்றும் என்பது திண்ணம். அன்பும் அருளும் நிறைந்த ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய தேசிக மகா சந்நிதானம் அவர்களுக்கு அறுபதாண்டு நிறைவு விழா நடைபெறுவதுணர்ந்து பெருமகிழ்ச்சியுறுகின்றேன். இவர்கள், சைவமும் தமிழும் தழைத்தோங்க அரும்பெருந் தொண்டுகள் புரிந்து பல்லாண்டுகள் வாழ்ந்தருளுமாறு புறம்பயத் தெம்பெருமான் திருவடிகளைப் பன்முறை வணங்குகின்றேன். MA