விவசாயிகள் சிறப்புடன் விளங்கினமையால் வியாபாரம் மிகச்செழித்தது. இம்மன்னன் இராஜதானி நகரமாக விளங்கியது பூம்புகாரெனும் காவிரிப்பூம்பட்டினமே. இஃது ஒரு சிறந்த துறைமுகப்பட்டினமாக அக்காலத்திலிருந்தது. கப்பல்கள் திசைமாறியும் நிலைமாறியுஞ் செல்லாமல் துறைமுகத்திற்கு வந்து சேரும்பொருட்டு இப்பட்டினத்தில் அநேக தீபஸ்தம்பங்கள் இருந்தனவாம். இதனை “இலங்குநீர் வரைப்பிற்கலங்கரை விளக்கமும் என்ற சிலப்பதிகாரத்தாலுணர்க. இத்துறைமுகத்தில், குதிரை, கற்பூரம், சந்தனம், அகில் முதலியவை இறக்குமதி செய்யப்பெற்றன; முத்து, பவளம், மிளகு, வாச னைச்சாமான் முதலியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்விதமாக வியா பாரம் நடந்தமையால் அரசனுக்கு ஏற்றுமதி இறக்குமதி மூலமாய் வரக் கூடிய இறைவரியிலிருந்து வருமானமும் அதிகரித்தது கடலோரங்களில் கட்டப்பட்டுள்ள பெரிய பண்ட சாலைகளில் இரவும் பகலும் வந்திறங்கிய பண்டப்பொதியின்மீது, அரசனுடைய உத்தியோகஸ்தர்கள் சோழன் கொடியின் அடையாளமாகப் புலிப்பொறியைப் பொறித்துவிடு வார்கள். அவ்வாறு பொறித்த பிறகு வரியைக் கொடுத்து ரசீதைப் பெற்றுக் கொண்டுதான் வியாபாரிகள் தமது பண்டகங்களை வெளியே எடுத்துப் போவார்கள். இவற்றை, “அளந்தறியாப்பலபண்டம் வரம்பறியாமைவந் தீண்டி யருங்கடிப்பெருங்காப்பின் வலியுடைவல்லணங்கினோன் புலிபொறித்துப்புறம்போக்கி என்ற செய்யுளடிகளாலறிக. வியாபாரத்திற்காக வெளியூர்களிலிருந்து வந்துள்ள வர்த்தகர்கள் உள்ளூரிலிருந்த வர்த்தகர்களோடு இனிமை யாகக் கலந்து வாழ்ந்தார்கள். இவர்கள் பதிபழகிக்கலந்தினிதுறையும் வர்த்தகர்கள் என்று சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். இம்மன்னர் பெருமான் போர் செய்யவிரும்பி வடதிசைக்குச் சென்று வடபுலத்தரசர்களை வென்று, அங்கு எதிரே குறுக்கிட்ட இமய மலையைச் செண்டினால் அடித்து அதன் பிடரிடத்தே தனது புலியைப் பொறித்துவந்தானென்பது, "இருநிலமருங்கிற் பொருநரைப்பெறா அச் செருவெங்காதற்றிரமாவளவன் ........ சிமயப்பிடர்த்த லைப்