கொடுவரியேற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு என்னும் சிலப்பதிகாரத்தினானும், "செண்டுகொண்டு கரிகாலனொருநாலினிமயச் சிமயமால்வரை திரித் தருளிமீளவதனைப் பண்டுநின்ற படிநிற்களிதுவென்றுமுதுகிற் பாய்புலிக்குறிபொறித்தலுமறித்த பொழுதே என்னும் கலிங்கத்துப்பரணியானும், "கச்சிவளைக்கச்சிகாமக் கோட்டங்காவன் மெச்சியினிதிருக்குமெய்ச்சாத்தன் - கைச்செண்டு கம்பக்களிற்றுக்கரிகாற் பெருவளத்தான் செம்பொற்கிரிதிரித்தசெண்டு " என்னும் பழைய செய்யுளானும், ... இலங்கு வேற்கரிகாற் பெருவளத்தோன் வன்றிறற்புலியிமயயமால்வரை மேல் வைக்க வேகுவோன்" என்னும் பெரியபுராணத்தானும் அறியக்கிடக்கின்றது. இதனால் இவன் போர்வீரமும் ஆண்மையும் நன்குவிளங்கு கின்றன. இவன் தேசத்தில் 60,000 குடிகள் இருந்தார்களென்றும் அக்குடி களும் நெடு நிலமுழுதாளும் கரிகாலனை முதற்குடியாக வைத்து எண்ணுதலையுடைய அவ்வளவு மிக்கோங்கிய செல்வமுள்ள ஒப்பற்ற குடிகளாயிருந்தார்களென்றும் சிலப்பதிகாரம் கூறும். இம் மன்னர் பெருமானின் மீது கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் ஒரு தமிழ்ப்புலவர் பட்டினப்பாலை என்னும் பிரபந்தம்பாடி 16 லட்சம் பொன் பரிசுபெற்றவரென்பது, தழுவுசெந்தமிழ்ப்பரிசுவாணர் பொன் பத்தொடாறுநூ றாயிரம்பெறப் பண்டுபட்டினப்பாலைகொண்டதும் என்ற கலிங்கத்துப்பரணிச் செய்யுளால் அறியப்படுகிறது. மேற்கூறிய பிரபந்தமும், இவன்மீது முடத்தாமக்கண்ணியார் என்னும் தமிழ்ப்புலவர் பாடிய பொருநராற்றுப்படை என்னும் பிரபந்தமும் பத்துப்பாட்டிற் காணப்படுகின்றன. அன்றியும், சங்கத்துச் சான்றோர் இவன்மீதியற்றி யுள்ள தனிச்செய்யுட்களும் புறநானூற்றிற் காணப்படுகின்றன.