உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



152 என்னும் முச்சங்கங்களிலும் சான்றோர்களால் ஆராயப்பெற்று ஒப்பற்ற இலக்கிய இலக்கணங்களையும் இசை நாடக நூல்களையும் பல்வகைப்பட்ட வேறு நூல்களையும் தன்பாற்கொண்டு சிறந்து விளங்கியது. அவற்றுள் பெரும்பாலான நூல்கள், இருமுறை நம் தமிழகத்தில் நிகழ்ந்த கடல் கோள்களாலும் அன்னியர்களின் படையெழுச்சிகளாலும் அழிந்து போய்விட்டன. அந்நூல்களுள் சிலவற்றின் பெயர்கள் மாத்திரம் பழைய உரையாசிரியர்களின் உரை மேற்கோள்களால் அறியக் கிடக்கின்றன... இப்போதுள்ள நூல்களுள் மிக்க பழமை வாய்ந்தது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலேயாகும். அஃது. ஆசிரியர் தொல்காப்பியனாரால் முதற்சங்கத்திறுதிக்காலத்தில் இயற்றப்பெற்று, இடைச்சங்கத்தார்க்கும், கடைச்சங்கத்தார்க்கும் இலக்கணமாயிருந்தது; தனித்தனியே ஒன்பது ஒன்பது இயல்களையுடைய எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களையும் உடையது. அதிலுள்ள பொருளதிகாரம் ஒரு தனிச்சிறப்புடையது; அது பிறமொழிகளில் காணப்படாததுமாகும். பண்டைத் தமிழ் மக்களுடைய வழக்க ஒழுக்கங்களையும், நாகரீக நிலையினைவும், வரலாற்றினையும், பிற இயல்புகளையும் பொருளதிகாரச் சூத்திரங்களால் நன்கு உணர்ந்து கொள்ளலாம். தமிழ் மொழியிலுள்ள பல்வகைப்பட்ட செய்யுட்களுக்கு உரிய இலக்கணங்களையும் அப்பொருளதிகாரத் திலுள்ள ஒன்பது இயல்களுள் ஒன்றாகிய செய்யுளியல் விரித்துரைப்பது அறியத்தக்கதாகும். தொல்காப்பியம் இயற்றப்பெற்ற காலத்தில் புதிய ஆண்டு ஆவணி மாதத்தில் தொடங்கியிருத்தல் வேண்டும் எனபது அதிலுள்ள சூத்திரத்தால் அறியக்கிடத்தலால், அது பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றிய பழந்தமிழ் நூலாதல் வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே, அது தமிழ்மொழியிலுள்ள ஆதிகால நூலாதல் தெள்ளிது. அதற்கு இளம்பூரண அடிகள், பேராசிரியர், கல்லாடர், தெய்வச்சிலையார், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய புலவர் பெருமக்கள் அறுவர் உரை எழுதியிருப்பதே அதன் பழமையை நன்கு உணர்த்துவதாகும். இனி, தொல்காப்பியத்திற்குப் பிற்பட்ட கால இலக்கியச் சரிதத்தைக் கடைச்சங்க காலம், இருண்டகாலம், பல்லவ பாண்டியர் காலம், சோழர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், அன்னியர் ஆட்சிக்காலம் என்று பிரித்து ஆராய்வது அமைவுடையதாகும். - கடைச்சங்க காலம் மதுரை மாநகரில் பாண்டிய அரசர்களால் நிறுவப்பெற்று நடைபெற்று வந்த தமிழ்ச்சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் நிகழ்ந்த களப்பிரர்களின் - படையெழுச்சியால்