பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



1561 புலப்படவில்லை. அந்நூலில் சில பருவங்களே இக்காலத்தில் உள்ளன. நம்பியாண்டார் நம்பியின் பிரபந்தங்களுள் சிலவும் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியவையாகும். சோழர் காலம் இது கி.பி. 900 முதல் கி.பி. 1279 முடியச் சோழர் பேரரசு நடைபெற்ற காலம் ஆகும். இக்காலப் பகுதியில் சிறந்த தமிழ் நூல்கள் தோன்றியுள்ளன எனலாம். கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியும் சில பிரபந்தங்களும், திருத்தக்க தேவரால் இயற்றப்பெற்றதும் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாயதும் ஆகிய சீவகசிந்தாமணியும், தோலா மொழித் தேவரது சூளாமணியும் தோன்றியிருத்தல் வேண்டும். அந்நூற்றாண்டினிடையிலே, முதல் கண்டராதித்த சோழரது திருவிசைப் பாப்பதிகமும் கல்லாடனாரது கல்லாடமும், அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பரது இராமாயணமும், அமித சாகரருடைய செய்யுள் இலக்கண நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய நூல்களும் இயற்றப்பெற்றனவாதல் வேண்டும். திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும் அந்நூற்றாண்டில் தோன்றியவை என்பது அறிஞர் சிலருடைய கருத்தாகும். கி.பி. பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருவூர்த்தேவருடைய திருவிசைப்பாப் பதிகங்களும், இராசராச விசயம், இராசராசேசுவர நாடகமும் இயற்றப் பெற்றுள்ளன. பின்னிரண்டு நூல்களும் முறையே முதல் இராசராச சோழனையும் அவன் தஞ்சைமாநகரில் எடுப்பித்த பெரிய கோயிலையும் பற்றிய வரலாறுகளாக இருத்தல் வேண்டும். அவை இக்காலத்தில் கிடைக்கவில்லை. பொன்பற்றிக் காவலன் புத்தமித்திரனுடைய வீரசோழியம் என்ற இலக்கண நூல் அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் வீரராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் இயற்றப் பெற்றதாகும். தமிழிலுள்ள பிற்கால இலக்கண நூல்களுள் ஐந்திலக்கணமும் ஒருங்கே யமைந்த பழைய நூல் அதுவே எனலாம். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதற்குலோத்துங்க சோழன்மீது சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியும், அந்நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழன் உலா; கலிங்கப்பரணி* அரும்பைத் தொள்ளாயிரம், குலோத்துங்க சோழன் உலா, கலிங்கப்பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், குலோத்துங்க சோழன் உலா,

  • இப்பரணி விக்கிரம சோழன் தென் கலிங்கத்தை வென்றமை பற்றி ஒட்டக்கூத்தரால் பாடப் பெற்றது.