157 இராசராசசோழன உலா, தக்கயாகப்பரணி ஆகிய நூல்களும் வச்சத் தொள்ளாயிரம், கண்டனலங்காரம், தண்டியலங்காரம் என்ற நூல்களும், அந்நூற்றாண்டின் இறுதியில் சேக்கிழாரது பெரிய புராணம், பவணந்தி முனிவரது நன்னூல், குணவீர பண்டிதருடைய நேமிநாதம், வச்சணந்திமாலை, வெண்பாப் பாட்டியல், நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் ஆகிய நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. அவற்றுள், கலிங்கப்பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், கண்டனலங்காரம், வச்சத்தொள்ளாயிரம் என்பன இப்போது கிடைக்கவில்லை. இந்நாளில் தமிழ் மொழியிலுள்ள பரணி நூல்களுள் சயங்கொண்டாரது கலிங்கத்துப் பரணியும், பிள்ளைத் தமிழ்களுள் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழுமே பழமை வாய்ந்தவையாகும். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அறநிலை விசாகனாகிய வத்சராசனது பாரதம், பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், காங்கேயன் பிள்ளைக் கவி, மெய்கண்டாரது சிவஞான போதம், அருணந்தி சிவாசாரியரின் சிவஞான சித்தியார், இருபா இருபஃது, மனவாசகங்கடந்தாரது உண்மை விளக்கம் என்னும் நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள், வத்சராசனது பாரதமும் காங்கேயன் பிள்ளைக் கவியும் இந்நாளில் கிடைத்தில. தமிழ் மொழியிலுள்ள. சைவசித்தாந்த நூல்கள் பதினான்கினுள் சிவஞான போதமே தலைமை வாய்ந்ததாகும். பிற்காலப் பாண்டியர் காலம் இது கி.பி. 1216 முதல் 1342 வரையில் பாண்டியரது இரண்டாம் பேரரசு நடைபெற்ற காலமாகும். கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழேந்தியாரது நளவெண்பாவும் பொய்யா மொழிப் புலவரது தஞ்சைவாணன் கோவையும் இயற்றப்பெற்றுள்ளன. திருக்குறள், பரிபாடல் இவற்றின் உரையாசிரியராகிய பரிமேலழகரும், தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியராகிய சேனாவரையரும் இக்காலத்தில் இருந்தவர்களே யாவர். கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் உமாபதி சிவாசாரியர் இயற்றிய சிவப்பிரகாசம் முதலான சைவசித்தாந்த நூல்கள் எட்டும், கோயிற் புராணமும், இரட்டையர்கள் பாடிய தில்லைக் கலம்பகமும், திருவாமாத்தூர்க் கலம்பகமும், ஏகாம்பரநாதர் உலாவும் தோன்றியவையாதல் வேண்டும். அந்நியர் ஆட்சிக் காலம் - கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் இடையில் நம் தமிழ்நாடு மகமதியரது ஆட்சிக்கு உள்ளாயிற்று. பிறகு, கன்னடம், தெலுங்கு,