உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



162 பெருஞ்செல்வமும் அருங்கல்வியும் எய்திச் சிறந்து வாழ்ந்தவர். செய்ந்நன்றியறிதல், பிற புலவர் பெருமக்களை உளம் உவந்து பாராட்டுதல், மாணாக்கர்கட்குப் பாடஞ்சொல்லி அன்னாரை நல்வழிப்படுத்தல் ஆகிய உயர்ந்த குணங்கள் இவர்பால் நன்கு அமைந்திருந்தன என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இவர் காலத்திருந்த புலவர்கள் நம்பிகாளியார், - நெற் குன்றவாண முதலியார், தமிழ்த் தண்டியாசிரியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் முதலானோர் ஆவர். கம்பர், புகழேந்தி, சேக்கிழார் ஆகியோர் இவர் காலத்தில் இருந்தவர்கள் என்பது சிலருடைய கொள்கையாகும்; அதற்குத்தக்க ஆதாரங்கள் இல்லை என்பது அறியத் தக்கது. அவர்களுள் புகழேந்திப் புலவர் இவருக்குச் சற்றேறக் குறைய நூறாண்டுகளுக்குப் பிற்பட்டவர். எனவே, இவருக்கும் அப்புலவருக்கும் வாதப் போர் நிகழந்தது என்றும், இவர் தூண்டுதலால் அவர் சோழமன்னனால் சிறையிலிடப்பட்டார் என்றும் கூறப்படும் செய்திகள் எல்லாம் வெறுங்கற்பனைக் கதைகளேயன்றி உண்மையான சரித்திர நிகழ்ச்சிகள் ஆகமாட்ட என்பது திண்ணம். இவர் புலவர் பெருமக்களிடத்தில் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தவர் என்பதை இவருடைய நூல்களால் நன்குணரலாம். இவரை ஆதரித்தவர்கள் மேலே குறிப்பிடப்பெற்ற சோழ மன்னர் மூவரும் அவர்களுடைய அமைச்சர்களும் படைத்தலைவர்களுமான அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன், திருச்சிற்றம்பல முடையான் பெருமானம்பி என்பவர்களும் காவிரிப்பூம்பட்டினத்து வீரர்கள் புதுவைக்காங்கேயன், திரிபுவனைச் சோமன் ஆகியோரும் ஆவர். இவர் இயற்றியனவாக இப்போது அறியப்படும் நூல்கள, விக்கிரம சோழனுலா, கலிங்கப்பரணி, அரும்பைத்தொள்ளாயிரம், குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா, தக்கயாகப்பரணி, காங்கேயன் நாலாயிரக் கோவை என்பனவாம். அன்றியும், இவர் சில சமயங்களில் பாடியனவாகச் சொல்லப்படும் சில செய்யுட்கள் தமிழ் நாவலர் சரிதை முதலியவற்றில் உள்ளன. - - விக்கிர சோழனுலா முதற்குலோத்துங்க சோழனுடைய புதல்வனும் அவனுக்குப் பிறகு சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்டவனுமாகிய விக்கிரம சோழன்மீது இயற்றிய உலா. இந்நூல் அவ்வேந்தன் வீதியில் பவனிவருங்கால் நகரிலுள்ள எழுபருவப் பொதுமகளிரும் அவனைக் கண்டு காமுற்றதாகக் கலிவெண்பாவில் பாடப்பெற்றது. அவன் முன்னோரான பண்டைச்