பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



169 அறந்தருசிந்தை யென்னா விநாயகன் பிறந்தபார்முழுவதுந் தம்பியேபெறத் துறந்துநான்புகுந்த நாள்வலந்துடித்ததே, இதன் கருத்து :- என்னாருயிர் நாயகன் தனது இராஜ்ய முழுதுந் தம்பிக் களித்து நாடு துறந்து காடுசென்ற நாளில் என்கண் முதலியன வலப்பக்கத்திற் றுடித்தன என்பதாம். சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 35. நஞ்சனையநன்வனத்திழைக்கு நாளிடை வஞ்சனையால்வலந்துடித்தவாய் மையால் எஞ்சலவீண்டு தாமிடந்துடித்ததால் - அஞ்சலென்றிரங்குதற் கடுப்பதியாதென்றாள். இதன் கருத்து :- வனத்தின்கண் இராவணன் எனக்குத் தீங்கிழைத்தநாளில் என் கண்முதலியன வலப்பக்கத்திற் றுடித்தன; ஈண்டு இடத்திற் றுடித்தன; இதனால் எனக்குண்டாகும் நன்மை யாது என்றன ளென்பதாம். இவ்வண்ணம் சீதாபிராட்டியார் கூறிய கட்டுரையைச் செவிசாய்த்துக் கேட்டுக்கொண்டிருந்த திரிசடையென்னு மன்பினாள் “உன்றுணைக்கணவனையுறுதலுண்மையால், என்று அதன்பலனைத் தெரிந்து கூறினாள். இதுகாறுஞ்செய்த ஆராய்ச்சியால் கண், தோள் முதலிய இடத்திற்றுடித்தால் நன்மையும் வலத்திற்றுடித்தால் தீமையுண்டாகு மென்பது அறியக்கிடக்கின்றது. இனி, பாண்டுவின் மகனாகிய பார்த்தன்; தன்புத்திரன் போரிலுயிர் துறந்ததையறியானாய், பாசறைக்குத் திரும்பி வருங்கால், கண்ணபிரானை நோக்கி, என்கணுந்தோளுமார்பு மிடனுறத் துடிக்கைமாறா னின்கணு மருவிசோரநின் றணையின்று போரிற் - புன்கணுற்றவர்கண் மற்றென்றுனைவரோபுதல்வர்தாமோ என்று வினாவினான். இதனாற் கண் தோள் முதலியன இடத்திற்றுடித்தால் தீமையும் வலத்திற்றுடித்தால் நன்மையுமுண்டாகுமென்பது அறியப் படுகிறது. ஆனால் இம்முடிபு முன்னர் வரைந்துள்ள முடிபுடன் பொருந்தாது முரணுகின்றதேயெனின், இம்முடிபு ஆண்பாலார்க்கும், முன்னர்வரைந்துள்ள முடிபு பெண்பாலார்க்கு முரித்தாகலின் உண்மையில் முரணாதென்க. இதனால் ஆண்பாலார்க்குக் கண் தோள் முதலியன இடத்திற்றுடித்தால் தீமையும் வலத்திற்றுடித்தால் நன்மையு முண்டாகுமென்பதும் பெண்பாலார்க்கு இடத்திற்றுடித்தால் நன்ன யும்