168 ஊ. பண்பாட்டாய்வு 36. துடிக்குறி ஒவ்வொருவரும் தத்தம் வாழ்நாளில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களைச் சோதிட சாத்திரத்தின் வலிமையினால் முன்னரே அறிந்து கொள்ளலாம்; இஃது நம்முன்னோர்கள் கொண்ட முறை யென்பது யாவரும் அறிந்த விஷயம். அன்றியும் கண், தோள், மார்பு முதலிய உறுப்புகள் துடித்தலினாலும் பின்னர்ச். சம்பவிக்கும் சுகதுக்கங்களைத் தூலமாக அறிந்து கொள்ளலாம். இஃதும் நம்முன்னோர்கள் கொண்ட முறைகளில் ஒன்றென்பது யான் அடியில்வரையும் ஆராய்ச்சியால் நன்கு விளங்கும். இராவணனாற் சிறையிடப்பெற்று அசோகவனத்திருந்த சீதாபிராட்டி, ஆண்டு அருகேயிருந்த தாயினுமினியவளாம் திரிசடையை நோக்கி, தூயை நீ கேட்டியென் துணைவியாமெனா - மேயதோர் கட்டுரை பகர்ந்தனள். அக்கட்டுரையை ஈண்டு வரைகின்றேன். சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 32. நலந்துடிக்கின்ற தோநான் செய்தீவினைச் சலந்துடித்தின்னமுந்தருவ துண்மையோ பொலந்துடிமருங்குலாய் புருவங்கண்முதல் வலந்துடிக்கின்றிலவருவ தோர்கிலேன். இதன்கருத்து :- எனாது கண் புருவம் முதலியன இடது பக்கத்திற்றுடிக்கின்றன; இதனால் நன்மையுண்டாமோ அல்லது தீமையுண்டாமோ யான் அறிகின்றிலேனென்பதாம். சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 33. முனியொடுதிலையின் முதல்வன்முந்துநாள் துனியறுபுருவமுந்தோளுநாட்டமும் இனியன துடித்தன வீண்டுமாண்டென நனிதுடிக்கின்றனவாய்ந்து நல்குவாய். இதன் கருத்து :- விசுவாமித்திரமுனிவருடன் இராமபிரான் என்னை மனம்புணர மிதிலைக் கெழுந்தருளிய நாளில் என்னுடைய கண், தோள், மார்பு முதலியன என்பக்கந் துடித்தனவோ அப்பக்கத் தீண்டுந்துடிக்கின்றன; இதன்பலனை ஆராய்ந்து கூறக்கடவாய் என்பதாம். சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 34. மறந்தனெனிதுவுமோர்மாற்றங்கேட்டியால்