உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



171 37. எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள் 1. பண்டைக்காலத்தில் திருவிழாக்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றன என்பது. தற்காலத்தில் நம் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் திங்கள்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவதை யாரும் அறிவர். இவற்றுட்சில, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம் என்று வழங்கப்படுகின்றன. இவ்விழாக்களில் ஒவ்வொன்றும் இக்காலத்தில் பத்து நாட்கள் முடிய நடைபெறுகின்றது. தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் ஆட்சிபுரிந்த நாட்களில் இவ் விழாக்கள் பத்து நாட்கள் நடைபெறவில்லை என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. ஆனால் அக்காலத்தில் இவை எத்தனை நாட்கள் நடைபெற்றன என்பதை யுணர்த்தக் கூடிய மூன்று கல்வெட்டுக்களை அடியிற் குறிக்கின்றேன். - * I (1) ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி வன்மற்கு யாண்டு க -ஆவது இவ்வாண்டு (2) குன்றியூர் நாட்டு தேவதானம் திரு நிலக்குன்றத்துத் திரு (3) மேற்றளிப் பெருமானடிகளுக்கு மாசிமகந்திருவிழா வொடுக்கிய (4) ன்று ஏழுநாளும் பதினைவர் மாகேஸ்வரர் பெறுபடி உண்ணப் (5) பரம்பையூர் சடையனன்பியைச் சார்த்திச் சடையன் கலைச்சி (6) வைத்த துளைப்பொன் ஐங்கழஞ்சின் பலிசையால் உண்ணவைத்தது - இது மாகேஸ்வர ரக்ஷை -2 (புதுக்கோட்டை நாட்டிலுள்ள குளத்தூர் தாலூகா குடுமியான் மலைக்கல்வெட்டு)

  • 11 (1) ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி வன்மற்கு யாண்டு உ உ திருநிலக் குன்றத்துப் பெருமானடிகளுக்குப் பங்குனி உத்தரம் ஏழு நாளும் நிதி இருபது பிராமணருண்ண ஒரொருத்தற்கு (2)... ஒரு பிடி தயிர் நாழி பாக்கொன்றுமாக செவெலூர் பட்டம் படாரியான் பாண்டியதியரசி வைத்த துளைப்பொன் ரு-ம் பன்மாகே...(3) ஒராருத்...தற்கு நாடுரியரிசி தயிர் மூழக்கு கறி ஒன்று வேள்கோவுக்கு நாடுரி அடுவர்க்கு முந்நாழி விறகுக்கு நாழி ஆக பொன் ரு-ம் முதல்...(குடுமியான் மலைக் கல்வெட்டு).
  • III (1) திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்-தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் - காந்தளூர்ச் சாலைக் களமறுத் தருளி - வேங்கை நாடுங் கங்க பாடியும் - நுளம்ப பாடியும் தடிகை வழியும் - குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் - எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் - இரட்டபாடி ஏழரை இலக்கமும் - திண்டிறல் வென்றி தண்டாற்கொண்ட - தன்னெழில் வளர ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோவிராஜ ராஜகேசரிவன்மராகிய ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு உ அ
      • (Page 549) Inscriptions of the Pudukkottai State No.57, 70 and 90.