பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



172 ஆவது கேரளாந்தக வளநாட்டு உறத்தூர்க் கூற்றத்து பிரம தேயம்விக்கிரமகேசரி சதுர்வேதிமங் கலத்துப்பால் திருவிறை யான்குடி மகாதேவற்கு... சேனாபதி உத்தம சோழ நல்லூருடைய யான்பாளூர் அம்பலத்தாடியான் முடிகொண்ட சோழ விழுப்பரையன் தாயார் பாசூர் நங்கையார் பேரால் பாசூர் நங்கைநல்லூர் என்னும் பெயராலும் இவ்வூர் ஏரி அத்தாணிப்பேறேரி என்றும் பெயராய் இப்பாசூர் - நங்கை நல்லூர் நாங்கள் இறையிலியாக விற்றுக் கொடுத்தோம். இவ்வூர், நிலம் முன் இத்தேவற்குவேண்டும் - நிவந்தங்களுக்கு செய்கின்றமையில் சித்திரைத் திருநாள் திருவாதிரைத் திருநாள் ஏழுநாளும் திருஉத்ஸவம் எழுந்தருளி தீர்த்தமாடியருள வேண்டும் அழிவுகளுக்கும் இத்தேவற்கு முன் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்யும் அடிகள் மார்க்கு, நிவந்தம் மிலாமையால் இத்திருப்பதியம் விண்ணப்பஞ் செய்வார் ஒருவர்க்கு நிசதம் நெல்லு பதக்காக நால்வர்க்கு நிசதம் இருதூணிக்ககப்பட முதல் ஒராட்டைக்கு காசு - ஆக நால்வர்க்குக் காசு நிவந்தமாக செய்தோம்...(குளத்தூர் தாலூகா திருவிளாங்குடியிலுள்ள கல்வெட்டு). மேலே குறித்துள்ள மூன்று கல்வெட்டுக்களும்மாசித் திங்களில் நடத்தப்பெறும் மக விழாவும் பங்குனித் திங்களில் நடத்தப்பெறும் உத்தர விழாவும் சித்திரைத் திங்களில் நடத்தப்பெறும் சித்தரை விழாவும் மார்கழித் திங்களில் நடத்தப்பெறும் திருவாதிரை விழாவும் முற்காலத்தில் எவ்வேழு நாட்களே நடந்தன என்பதை நன்கு விளக்குகின்றன. (2) தெலுங்குமொழியில் முதலில் செய்யுளும் செய்யுள் நூலும் தோன்றிய காலம். குண்டூர் ஜில்லா ஓங்கோல் தாலுகாவிலுள்ள ஆதங்கி (Adanki) என்ற ஊரில் ஒரு வயலில் கிடக்கும் கல்லில் சில செய்திகள் பொறிக்கப் பெற்றுள்ளன. அதில் ஒரு தெலுங்குச் செய்யுளும் உளது. அக்கல்வெட்டு கி.பி.844 முதல் கி.பி. 888 முடிய ஆட்சிபுரிந்த கீழைச்சாளுக்கிய மன்னனாகிய மூன்றாம் கனகவிசயாதித்தனது ஆளுகையின் முதலாம் ஆண்டாகிய கி.பி. 845 இல் பாண்டரங்கன் என்பான் அவ்வேந்தன்பால் படைத் தலைவனாக அமர்ந்தான் என்பதைத் தெரிவிக்கின்றது.* அக்கல்வெட்டிற் காணப்பெற்ற தெலுங்குச் செய்யுளுக்கு முன்னர் இயற்றப்பட்ட வேறு தெலுங்குச் செய்யுட்கள் இதுகாறும் கிடைத்தில. எனவே, தெலுங்கு மொழியில் முதலில் செய்யுள் இயற்றப்பெற்ற காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியாகும்.