பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



11 3. சோழன் செங்கணான் கோச்செங்கட்சோழ நாயனார் என்னும் பெயருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவனாக விளங்குகின்றவனும், சைவசமயாசாரியரில் ஒருவராகிய ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகள் . திருவாய். மலர்ந்தருளிய திருத்தொண்டத்தொகையில் 'தென்னவினா யு லகாண்ட செங்கணான்' என்று கூறப்படுகின்றவனும் இம்மன்னனேயாவன். இவ்வரசர், பூர்வஜன்மத்தில ஒரு சிலந்திப்பூச்சா யிருந்தனனென்றும், அப்பொழுது அப்பூச்சி திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழமர்ந்திருந்து சிவபெருமான் மீது சூரிய கிரகணங்கள் படாவண்ணமும் சருகுகள் உதிராவண்ணமும் தன்வாய் நூலினாலே மேலேவலைகள் கட்டிப் பாதுகாக்குந்தொண்டு செய்து வந்த தென்றும், அதே சிவலிங்கத்தை வழிபட்டுவந்த ஒரு யானை மேலே கட்டியுள்ள வலைகளை அநுசிதமென்று நாடோறும் சிதைத்தும்வர, இதனைப் பண்ணாட்களாகச் சிலந்திகண்டு, பொறாது தன்பணிவிடைகளை இரக்கமின்றியழிக்கும் யானையின்மீது சினந்து, அதன் துதிக்கையுட்புகுந்து நோயுண்டாக்க, யானை அதனைப் பொறுக்கமுடியாமல் தன் துதிக்கையைக் கீழேயறைந்து தன்னையும் தன்னுட்புகுந்திருந்த சிலந்தியையும் கொன்ற தென்றும், இவ்வாறு மரணமடைந்த சிலந்தியே மறு ஜன்மத்திற் செங்கணானாகப் பிறந்ததென்றும் பெரிய புராணம் கூறும். இதனை, திருஞானசம்பந்தசுவாமிகள் - அரிசிற்கரைத்திருப்புத்தூர் 7-வது பாசுரம் சிலந்திசெங்கட்சோழனாகச் செய்தான் என்றும், திருநாவுக்கரசு சுவாமிகள் - திருக்குறுக்கை 4 சிலந்தியுமானைக்காவிற்றிருநிழற்பந்தர்செய்து உலந்தவனிறந்த போதேகோச்செங்கணானுமாகக் கலந்தநீர்க்காவிரி சூழ்சோணாட்டுச் சோழர்தங்கள் குலந்தனிற்பிறப் பித்திட்டார்குறுக்கைவீரட்டனாரே என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநின்றியூர் 1 “திருவும்வண்மையுந் திண்டிறலரசுஞ் சிலந்தியார் செய்த செய்பணிகண்டு, மருவுகோச்செங்கணான்றனக் களித்தவார்த்தை கேட்டு “நுன்மலரடியடைந்தேன் என்றும் நமது சமயாசாரியசுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய பாசுரங்களாலும் நன்கறியலாம்.