12 | இம்மன்னன் தனது தாய்வயிற்றிலிருந்து காலந்தாழ்த்துப் பிறந்தமையாற் சிவந்தகண்களை யுடையனாணிருந்தணன்: இவனை, செங்கணானென்று யாண்டும் வழங்கல் இக்காரணம்பற்றியே யென்க. இம்மன்னனது இராஜதானி நகரமாக விளங்கியது உறையூர்; இஃது அக்காலத்திற் பேரரணுடையதோர் சிறந்த நகரமாயிருந்தது. பண்டைத் தமிழ்நூல்களிற் கோழியூர் என்று வழங்கப்படுவதும் இந்நகரமேயாம். இதன்காரணத்தை, முற்காலத்து ஒரு கோழியானது யானையைப் போர்தொலைத்தலான் அந்நிலத்திற்செய்த நகர்க்குச் கோழியென்பது பெயராயிற்று என்னும் அடியார்க்கு நல்லார்கட்டுரையானு முணர்க. இம்மன்னர்பெருமான் புறநாட்டரசர்களைவென்று தன்னி ராஜ்யத்தை விஸ்தாரனப்படுத்தவிரும்பி, வஞ்சிசூடி, சேரநாட்டின் அரசனாகிய சேரன்கணைக்காளிரும்பொறைமேற் சென்றனன்; இவர்கள் இருவர்க்கும் கழுமலம்' என்னும் ஊரின்கண் ஒரு பெரும் போர் நடந்தது; அப்போரிற் சோழன்செங்கணான் வாகைமிலைந்த துடன், சேரமானையும், அவன் இன்னுயிர்த்தோழரும் நல்லிசைப் புலவருமாகிய பொய்கையாரையும் பிடித்துக் குடவாயிற்கோட்டத்துச் சிறையிட்டிருந்தான். பின்னர், ஆசிரியர் பொய்கையார் சோழன் செங்கணான் மீது ‘களவழிநாற்பது" என்னும் ஒரு செந்தமிழ் நூல்பாடிச் சேரமானைச் சிறைமீட்டனர். இதனை, களவழிக்கவிதை பொய்கையுரை செய்யவுதியன் கால்வழித்தளையை வெட்டியரசிட்டவவனும்" என்னும் கலிங்கத்துப்பரணிச் செய்யுளானு முணர்க (இராஜ பாரம்பரியம்-18). இனித் 'தென்னவனாயுலகாண்ட செங்கணான்' என்னும் திருநாவலூரர் திருவாக்கை நுணு கியாராயுமிடத்து, இவன் பாண்டி நாட்டையும் ஜெயித்துத் தன்னாட்சிக் குட்படுத்தியிருக்க வேண்டுமென்பது புலப்படுகின்றது. மேற்கூறியதையே மின்னாடு வேலேந்து விளைந்தவேளை விண்ணேறத் - தனிவேலுய்த் துலகமாண்டதென்னாடன் குடகொங்கன் சோழன்' என்னும் திருமங்கையாழ்வார் வாக்கும் பின்னும் வலியுடைத்தாமாறு செய்தலைக்காண்க. அன்றியும், இவனை, தென்றமிழன்வடபுலக் "முரஞ்செவி வாரணமுன் சமமுருக்கிய புறஞ்சிறை வாரணம். என்பது சிலப்பதிகாரம் (பக்.247-248) சீகாழி இந்நூல் சடைச்சங்கமருவிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருமங்சையாழ்வார் - பெரியதிருமொழி ஆரும் பத்து - வது அம்பரம் 6-வது பாசுரம்.