13 கோன் சோழன் என்று திருமங்கைமன்னன் புகழ்ந்துரைத்தமையால் இவன் வடநாடுகளையும் ஜெயித்து ஆட்சிபுரிந்தவனென்பது நன்குதெளியப்படும். இவ்வரசனைக் "கழன் மன்னர் மணிமுடி மேற்காகமேறத், தெய்வவாள் வலங்கொண்ட சோழன் என்றும், வெங்கண்மா களிறுந்தி விண்ணியேற்ற விறன்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த - செங்கணான் கோச்சோழன் என்றும், "பாராளாவரிவரென்றழுந்தை யேற்றப் படைமன்னருடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன் கோச்சோழன் என்றும் பன்முறை தம் பாசுரங்களில் திருமங்கை யாழ்வார் புகழ்ந்தோதலாலும், இவ்வரசர்பெருமானது போர்வீரமும் ஆண்மையும் நன்குவிளங்கும். இவ்வரசன் சிறந்தகல்விமான்; உலகநூல் முற்றக்கற்றுப் பலதுறைப்பயிற்சியுமுடையனாயிருந்தனன். செந்தமிழ்ப்புலவர்களை மிக ஆதரித்துவந்த சோழமன்னர்களுள் இவனும் ஒருவன். இம்மன்னன் மிக்கசிவபக்தன்; இவன் அறுபான் மும்மைநாயன்மார்களில் ஒருவனென்றும், ஸ்ரீமத் - சுந்தரமூர்த்தி சுவாமிகளால், திருத்தொண்டத்தொகையில் வணக்கங்கூறப் பெற்ற வனென்றும் முன்னரே கூறியுள்ளேன். இதனால் இம்மன்னர்பெருமானது சிவபக்தியின்மாண்பு எத்தன்மைத்தென்பது நன்கறியக்கிடக்கின்றது. இவன் சைவ சமயத்தில் மிக ஈடுபட்டவனேனும் வைணவத்திலும் அபிமானமுள்ளவனென்பது திருமங்கையாழ்வார் பாசுரங்களினால் அறியப்படுகிறது. சோழநாட்டில் அநேகசிவாலயங்கள் இவனால் எடுப்பிக்கப்பட்டுள்ளன. இதனை 'எண்டோளீசர்க் கெழின்மாடமெழுபது செய்துலகமாண்ட, திருக்குலத்துவளச் சோழன் என்னும் திருமங்கையாழ்வார்வாக்கானும், - “மந்திரிகடமை யேவிவள்ளல் கொடையனபாயன் - முந்தைவருங்கு முந்தைவருங்குலமுதலோனாய முதற்செங்கணான் அந்தமில்சீர்ச் சோணாட்டிலகனாடு தொறுமணியார் சந்திரசேகரன மருந்தானங்கள் பலசமைத்தான்" என்னும் பெரிய புராணச் செய்யுளானும் அறியலாம். 5 திருமங்கையாழ்வார் - பெரியதிருமொழி ஆரும் பத்து 5-வது அம்பரம் 5-வது 6 திருமங்கையாழ்வார் - பெரியதிருமொழி ஆரும் பத்து 6-வது அம்பரம் 3-வதுளு 1 திருமங்கையாழ்வார் - பெரியதிருமொழி ஆரும் பத்து, ஆறாவது அம்பரம், 4-ஆவது பாசுரம் 2 திருமங்கையாழ்வார்- பெரியதிருமொழி ஆரும் பத்து. ஆறாவது அம்பரம், 9-ஆவது பாசுரம் - திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஆரும் பத்து. ஆறாவது அம்பாம், 8 ஆவது பாசுரம் + பெரியபுராணம் கோச்செங்கட்சோழநாயனார் புராணம் 14ஆம் பாசு]ட்.