பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



175 5. கொல்லம் ஆண்டின் வரலாறு:- இக்காலத்தில் கிருஸ்தவாப்தம் நம் நாட்டில் வழங்கி வருதல் போல முற்காலத்தில் சகாப்தம், கலியாப்தம் முதலியன வழங்கி வந்தன என்பது கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியப்படுகின்றது. மலைமண்டலமாகிய மலையாளதேசத்தில் மாத்திரம் கொல்லம் ஆண்டு முன்னர் வழங்கி வந்ததோடு இன்றும் வழங்கி வருகின்றது. இக்கொல்லம் ஆண்டு எப்போது எவ்வாறு தொடங்கிற்று என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் நிகழ்த்திச் சரித்திராசிரியர்கள் ஒரு முடி பிற்கு வந்துள்ளனர். அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவரும் சேரநாட்டில் திருவஞ்சைக்களத்தில் - வீற்றிருந்து செங்கோல் - செலுத்திய முடிமன்னரும் சிவபெருமான் மீது திருக்கைலாய ஞானவுலா, பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை என்னும் பிரபந்தங்கள் இயற்றியவரும் ஆகிய சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு கைலாயஞ் சென்றது கி.பி. 825 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி என்பதும் அது முதல்தான் கொல்லம் ஆண்டு மலையாள தேசத்தில் வழங்கத் தொடங்கிற்று என்பதும் அன்னோரது முடிபுகளாகும். * ஆனால், மலைநாட்டில் வரையப் பட்டுள்ள கல்வெட்டுக்களைப் படித்துப் பார்த்தால் கொல்லம் ஆண்டின் வரலாறு அஃது அன்று என்பது நன்கு வெளியாகின்றது. அன்றியும், கொல்லம் ஆண்டு தோன்றியமைக்குக் காரணமும் அக்கல்வெட்டுக்களால் புலனாகின்றது. அவற்றுள் இரண்டு கல்வெட்டுக்களை அடியிற்காண்க. I. (1) ஸ்வஸ்திஸ்ரீ கொல்லந்தோன்றி யிருநூற்றைம் பத்திரண்டாமாண்டு நாஞ்சி நாட்டதியனூரான அழகிய பாண்டியபுரத்து கண்ணன் தேவனான உத்தம பாண்டியச் சிலை செட்டியேன் இந்நகரத் (2) தே...விலை கொண்டுடைய பூமிகொட்டியார் குளத்தில் தெற்கடைந்த நெடுங்கண்ணும் மேலைத்தடியும் பேய் கோட்டில் நீர் பாய்கிற காலுக்கு வடக்கும் பிராயோடு குழிக்கு மே (3) ற்கும் மாப்பாண்டி வயக்கலுக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்குட்பட்ட பூமி இந்நகரத்து பவிதிர மாணிக்க விண்ணகரெம்பெருமானுக்கு நித்தம் நானாழி அரிசி திருவமுதுக்கு சந்திராதித்தவரை செல்வதாகவைச்சு கொடுத்தேன் கண்ணன் (4) தேவனான உத்தம பாண்டியச் சிலைசெட்டியேன். (Travancore Archaeological Series Vol. III P.57.) II. (1) ஸ்வஸ்திஸ்ரீ கொல்லத் தோன்றி இருநூற்றுத் தொண்ணூற்றொன்பதாமாண்டு மிதுனத்தில் வியாழன் நின்ற ஆண்டு நாஞ்சி நாட்டதியனூரான அழகிய பாண்டியபுரத்து நகரத்தோம் இந்நகரத்து திருமேற்கோயில் பவித் (2) திர மாணிக்க விண்ணக ரெம்பெருமானுக்கு இந்நகரத்தோம் சந்திராதித்தவரை செல்வதாக நீர்

  • தமிழ் வரலாறு (திரு. ராவ்பகதூர் நி.வு. சீனிவாசபிள்ளை ) பிற்பாகம். பக்கம் 64.