உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



174 | உரை சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உளது. சொல்லதிகார உரைகளுள் சேனாவரையரது உரையே திட்பநுட்பம் வாய்ந்து கற்போர்க்குக் கழி பேருவகை பயக்கும் பெருமை பெற்றதென்பர், இச்சேனாவரையரது வரலாறு சிறிதும் புலப்படவில்லை. ஆனால் பாண்டிநாட்டில் பழைய காலத்தில் 'சேனாவரையன்' என்ற பெயர் வழங்கியுள்ளது என்பது ஒரு கல்வெட்டால் அறியப்படுகின்றது. அது, *(1) ஸ்வஸ்தி ஸ்ரீகோமாறஞ்சடையர்க்கு (2) யாண்டு இரண்டு இதனெதிர் (3) மூன்று இவ்வாண்டு மிதுன நாய (4) ற்றுத் திருச்சி விந்திரத்து - (5) எம்பெருமானுக்கு நியதம் (6) உழக்குநெய் முட்டாமல் (7) சந்திராதித்தனல் எரிவதாகத் (8) திருவழுதி வளநாட்டு திரு (9) வெள்ளூரில் சேனாவரையனாயின (10) தத்தன் அந்தரிவைத்த திருநொ (11) ந்தா விளக்கு ஒன்று இதற்கு விட்ட (12) சாவா மூவாப் பேரெருமை அஞ்சு (13) இவை மூலபரடை சபையார்க்குக் காட்டிக் கொடுத்தன என்பதாம். சில பெயர்கள் சில நாடுகளில் மாத்திரம் வழங்கி வருகின்றது. பிறநாடுகளில் அவை காணப்படவில்லை . எனவே, சோனாவரையன் என்ற பெயர் பாண்டி நாட்டில் மாத்திரம் வழங்கியுள்ளது என்று - அறியப்படுகின்றமையின் அப்பெயருடன் விளங்கிய தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியரும் பாண்டி நாட்டினராக விருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகின்றது. 4. புடவை:- இந்நாளில் புடவை என்பது பெண்மக்கள் உடுத்தும் உடையை உணர்த்துகின்றது என்பது யாவரும் அறிந்ததொன்றே. ஆனால், முற்காலத்தில் ஆண்மக்கள் உடுத்திய உடையும் புடவை என்றே வழங்கி வந்ததென்பது பல கல்வெட்டுக் களால் புலப்படுகின்றது. இவ்வுண்மையை அடியில் வரையப்படும் உத்தம சோழனது செப்பேட்டின் ஒரு பகுதியால் உணர்ந்து கொள்க.....ஆராதிக்கம் (43) வேதபிராமணன் ஒருவனுக்கு நெல் பதக்கம் இவனுக்கு புடவை முதல் (44) ஓராட்டை நாளைக்குப் பொன் ஐங் கழஞ்சும் பரிசாரகஞ் செய்யும் மாணி ஒருவனுக்கு (45) நெல் அறுநாழியும், இவ்னுக்குப் புடவை முதல் ஓராட்டை நாளைக்குப் பொன் (46) கழஞ்சும் திருமெய் காப்பான் ஒருவனுக்கு நிசதம் நெல் குறுணியும் இவனு (47)க்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்குப் பொன்னிரு கழஞ்சும் நந்தவன உழைப் (48) பார் இருவர்க்கு நிசதம் நெல் குறுணி நானாழியும் இவர்களுக்குப் புடவைக்குப் பொன் கழஞ்சும்'...** Travancore Archaeological' Series Vol. III No.27.-" (South Indian Inscriptions Vol. III No. '128)