உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



184 படும் நாட்டை ஆங்கிலேயர் பிடித்துக்கொண்டு இதை மிகுதியாகப்பயிரிட்டு இங்கிலாந்திற்கு அனுப்பிவந்தமையால் இதன் விலையும் குறைந்தது. ஆங்கிலேயர் எல்லோரும் இதனை எளிதில் வாங்கி உபயோகிக்கத் தொடங்கினர். முதலாம் ஜேம்ஸ் மன்னன் ஆட்சிக்காலத்தில் இதனை உபயோகிக்கும் தீயவழக்கம் இங்கிலாந்தில் எங்கும் பரவிற்று. அம்மன்னன் இதனைத்தடுக்கச் சட்டம் ஏற்படுத்தினன். ஆனால் இதனை உபயோகிக்கும் வழக்கம். ஒழியவில்லை . இதற்குக் காரணம் இது அந்நாட்டின் மக்களது மனத்தைப் பிணித்துத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டமையேயாம். உரோமாபுரியிலுள்ள போப்' கோயில்களில் இதனை உபயோகிப்பவர்களைச் சாதியினின்று - விலக்கவேண்டுமென்று ஒரு சட்டம் செய்தார். முதலாம் சார்லஸ் வேந்தன் காலத்தில் (1625 கி.பி. - 1649 கி.பி.) உப்பு, கஞ்சா, அபின் முதலியவற்றைப் போல் இதன் வாணிகமும் அரசாங்கத்தாரின் பக்கத்தில் இருந்தது. பின்னர் இதனை மாத்திரம் விலக்கிவிட்டனர். மூன்றாம் ஜார்ஜ் மன்னன் காலத்தில் (1760 - 1820) பொடியின் பெருமை மேனாட்டில் எங்கும் பரவலாயிற்று. ஆனால் இந்நாளில் பொடியைக் காட்டிலும் புகைச் சுருட்டை உபயோகித்தலே சிறந்த நாகரீகம் என்று மேனாட்டார் கருதுகின்றனர். இது அமெரிக்காவிலுள்ள பிரேசில் என்ற நாட்டிலிருந்த நம் நாட்டிற்குக் கி.பி. 1617 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஜிஹாங்கீர் சக்கரவர்த்திக்கு ஐரோப்பியன் ஒருவன் முதலில் இதனைப் பரிசிலாகக் கொணர்ந்து கொடுத்தனன் என்று கூறுகின்றனர். இப்போது இது நம்நாட்டில் எங்கும் பரவியுள்ளது.