பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



183 வழியாய் வங்களாத்திற்குக் கொண்டுவரப்பட்டுப் பிறகு தெலுங்கு நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் வந்தது. தெலுங்கில் இதனை 'வங்காய' என்று வழங்குவர்; வங்காளத்திலிருந்து வந்தது என்பது இதன் பொருளாகும். - 5. காப்பி :- இஃது அரபிமொழியாகும். இஃது அரேபியா விலிருந்து முதலில் பிரஞ்சு தேயத்திற்குக் கொண்டு போகப்பட்டது. அந்நாட்டினரும் இதனைப் பருகப்பழகினர். பின்னர், பிரஞ்சுதேய மக்கள் நம் தமிழ்நாட்டிற்கு வாணிகத்தின் பொருட்டு வந்தபோது அவர்களால் இது நம் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. நம் நாட்டினரும் இதனைப்பருக நன்குபழகினர். வடநாட்டினர் இதனைப் . பருக இன்னும் பழகாமைக்குக் காரணம் அவர்கள் பிரஞ்சு தேய மக்களோடு நெருங்கிப் பழகாமையேயாகும். நம் தமிழ் மக்கள் முன்னாளில் பிரஞ்சு தேயத்தாரோடு பெரிதும் நெருங்கிப்பழகியவர்கள் என்பதும் சிலகாலம் நம் தமிழ்நாடும் அன்னோர்களது ஆட்சியின் கீழ் இருந்த தென்பதும் இந்து தேயத்தின் பண்டை வரலாற்றை அறிந்தோர் யாவரும் நன்குணர்ந்தனவேயாம். ஆகவே, பிரஞ்சு மக்களிடத்திருந்தே நம் தமிழகத்தினர் காப்பியைப் பருகக் கற்றுக் கொண்டனர் என்க. 6. தேயிலை :- இது சீனதேயத்துப் பொருளாகும். இதனை அங்குத் 'தே' என்று வழங்குவர். ஆங்கிலேயர் சீனர்களிடமிருந்து தேயிலை - நீரைப் பருகக் கற்றுக்கொண்டனர். பின்னர், ஆங்கிலேயரிடத்திலிருந்து இதனைப் பருகுவதற்குத் தமிழ்மக்கள் கற்றனர். எனவே நம் தமிழ்நாட்டில் தேயிலையும் காப்பியும் பருகும் வழக்கம் நன்கு நிலைபெறுவதாயிற்று. ஆனால் வடநாட்டினர் தேயிலை நீரை மாத்திரம் பருகுதலை ஆங்கிலேயரிடமிருந்து பழகியுள்ளார். 7. உருளைக்கிழங்கு :- இஃது அமெரிக்காவில் முதலில் பயிரிடப்பட்டு வந்தது; 300 ஆண்டுகளுக்குமுன் இதனை ஐரோப்பாவிற்குக் கொண்டுவந்து பயிரிடத்தொடங்கினர்; நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவிலிருந்து நம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. 8. புகையிலை :- இது முதலில் அமெரிக்காவில் பயிரிடப் பெற்று வந்தது. பிறகு அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா என்னும் நாட்டிலிருந்து எலிசபெத் அரசியின் காலத்தில் கி.பி. 1586 ஆம் ஆண்டில் சர் வால்டர் ராலி என்பவனால் இங்கிலாந்திற்குக் கொண்டு வரப் பட்டது; இதனையுட்கொண்டால் பசியின்மை, மந்தம் முதலியவற்றைப் போக்கம் என்று அந்நாளில் ஆங்கிலேயர் பெரிதும் நம்பினர். ஆனால் இதன் விலை மிகுதியாயிருந்தமையால் செல்வமிக்கவர்களே இதனை வாங்கி உபயோகித்து வந்தனர். பிறகு அமெரிக்காவில் இது பயிரிடப்