பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



182 38. புறநாட்டுப் பொருள்கள் 1. வெற்றிலை :- வெறு+இலை; சமைத்தற்குப் பயன்படாத இலை என்பது. இதன் பொருள். தெலுங்கில் இதனை 'ஆக்கு' என்று வழங்குவர்; 'ஆக்கு' என்பது இலை என்று பொருள்படும். வடநாட்டுமொழிகளில் இதனைப் 'பான்' என்று கூறுகின்றனர்; இலை என்று பொருள்படும் 'பர்ணம்' என்ற ஆரிய மொழி 'பான்' என்றாயிற்றுப்போலும். தாம்பூலம், தம்பலம் என்பனவும் இலை என்ற பொருளையே உணர்த்தும். இது, மலேயாவிலிருந்து நம் நாட்டிற்குக் கொண்டுவரப்பெற்றதாகும். கோவலன், மதுரையிலுள்ள ஆயர்பாடியில் உண்டபிறகு அவனுக்குக் கண்ணகி வெற்றிலைச்சுருள் அளித்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனை உண்டினி திருந்த உயர்பே ராளற - கம்மென் றிரையலோ டடைக்கா யீந்த - ' என்னும் சிலப்பதிகார அடிகளால் உணர்க (XVI. 54-55) எனவே, இற்றைக்கு ஆயிரத்தென்ணூறு ஆண்டுகட்கு முன்னரே வெற்றிலை நம் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது நன்கறியக் கிடக்கின்றது. 2. சர்க்கரை :- வடமொழியில் இச்சொல் மணல் என்று பொருள்படும். மணல் போன்றிருக்கும் காரணம் பற்றி இப்பெயர் எய்தியது போலும். இஃது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் நாட்டிற்குச் சீனாதேயத்தினின்று கொண்டுவரப்பட்டது என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். 3. மிளகாய் :- இது நானூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென் அமெரிக்காவிலுள்ள சில்லி என்ற மாகாணத்திலிருந்து நம் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பெற்றதாகும். சுவையில் இது மிளகைப்போல் உறைப்பாயிருத்தலால் தமிழ்மக்கள் முதலில் இதனை மிளகுகாய் என்று வழங்கத் தொடங்கினர். பின்னர், இது ‘மிளகாய்' என்று மருவி வழங்கலாயிற்று. தெலுங்கில் இதனை ‘மிரிய புகாய்' என்று கூறுவார்; மிரியம் என்பதற்கு மிளகு என்று பொருளாம். மலையாளத்தில் இதனைக் 'கப்பல் மிளகு' என்று வழங்குவர். இது அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலமாய் அங்குவந்த காரணம்பற்றி அங்ஙனம் வழங்கிவருகின்றனர் போலும். இராசராசன் குலோத்துங்கன் முதலான சோழ மன்னர்கள் சர்க்கரை, மிளகு, சீரகம், புளி முதலியவற்றை வாங்குவதற்குத் திருக்கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருக்கின்றனர். ஆனால் அதில் மிளகாய் மாத்திரம் காணப்படாமைக்குக் காரணம் அந்நாளில் நம் தமிழகத்தில் அஃது இல்லாமையே யாகும். 4. கத்தரிக்காய் :- இஃது. அமெரிக்காவிலிருந்து மரக்கலத்தின்