உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



181 ஊள்ளது. இவைகளுக்கு அணித்தாகப் பழையாறை நகர் இந்நாளில் ஒரு சிற்றூராக இருக்கின்றது, பழையாறை நகரிலிருந்து பட்டீச்சுரமும் திருச்சத்தி முற்றமும் திருமேற்றளியும் வேறுவேறு ஊர்களாயினமை. போல, சாத்தனூரிலிருந்த திருக்கோயிலாகிய திருவாவடுதுறை என்பதும் ஒரு தனி ஊராகப் பிற்காலத்தில் வழங்கிவருதல் அறியத்தக்கது. திருவாவடுதுறை என்னும் பெயரும் இத்திருக்கோயிலைச் சூழ்ந்துள்ள சாத்தனூரின் ஒரு பகுதிக்கு மாத்திரம் வழங்கப் பெற்றுள்ளமையின், எஞ்சிய பகுதி சாத்தனூர் என்னும் பழைய பெயருடன் இதற்கு அண்மையில் இன்றும் நிலை பெற்றிருத்தல் உணரற்பாலதாகும்.