பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



20 படாமையின் அவையல்லவாகுக : நடப்பட்டகல்லின் கட்பீலியைச் சூட்டி நாராலரிக்கப்பட்டதேறலைச் சிறிய கலந்தானுகுப்பவும் அதனைக் கொள்வனோ? கொள்ளானோ? சிகரமோங்கிய உயர்ந்தமலை பொருந்திய நாடு முழுவதுங் கொடுப்பவும் கொள்ளாதவன் என்னுங்கருத்துப்பட இல்லாகியரோ ' காலை மாலை என்ற பாட்டைக்கூறி வருந்தினர்; இவர் பின்னும் தம்மாற்றாமை தோன்ற அடியில்வரும் உருக்கமானபாடலைக் கூறிப்புலம்பினர். . அருஞ்சொனுண்டேர்ச்சிப் புலவர்நாவிற் சென்றுவீழ்ந்தன்ற னருநிறத்தியங்கிய வேலே யாசாகெந்தையாண்டுளன் கொல்லோ வினிப்பாடுநருமில்லைப்பாடுநர்க் கொன்றீகுநருமில்லை " (புறம். 235) இதன்பொருள் :- அழகிய சொல்லையாராயும் நுண்ணிய ஆராய்ச்சியையுடைய அறிவினையுடையோர் நாவின்கண்ணே போய் வீழ்ந்தது அவனது அரிய மார்பகத்தின் கண்தைத்தவேல்; எமக்குப் பற்றாகிய எம்மிறைவன் எவ்விடத்துள்ளான் கொல்லோ? இனிப்பாடுவாருமில்லை; பாடுவார்க்கொன்றீ வாருமில்லை என்பதாம். இவ்வதிகமானது தவமகன் ஔவையாராற்பாடப்பெற்ற பொகுட்டெழினியென்பான். இவன்றன் அரும்பெறற்றந்தை யாரைப் போன்று தானும் நல்லிசைப் புலவராகிய ஔவையார்பால் நட்புரிமைபூண்டு, அவர்க்குச் சிறப்புப்பல செய்தனன் என்பர். அதிகமான் நெடுமானஞ்சியின் வரலாறு இதற்குமேல் அறியவிடமில்லையாதலால் இனி இவனது நகரும் மலையும் யாண்டையன வென்பதையாராய்வாம். இவனது தலைமை நகராகிய தகடூர் மைசூர் இராஜ்யத்திலிருக்கிறதாகக் தெரிகிறது. சித்தூரைச்சார்ந்த போலூருக்கடுத்த திருமலையென்றும் சமணக்கிராமத்திலுள்ள ஒருகல்வெட்டால் அதிகமான், அதிகன் என்றுகூறப்படும் கேரளதேசத்தரசனொருவன் இருந்தானென்பதும், இவன் குமாரனாகிய விடுகாதழகியபெருமாள் தகடாவென்று சொல்லப்பட்ட ஊரையாண்டானென்பதும், இவன் வம்சத்தில் எழினியென்ற ஓரரசனிருந்தானென்பதும் அறியப்படுகின்றன. வடமொழியில் தகடானென்பது . தமிழில் தகடூர் என்று வழங்கிவந்தது போலும். இப்பொழுது தென்கன்னடம் ஜில்லாவிலுள்ள குதிரைமூக்கு மலையே இவனுடைய குதிரைமலையாயிருக்கலாமென்று கருத இடமுண்டு.