பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- 32 கி.பி. 1001 வரை அவர் இருந்தாரென்பது. கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, தம் நாயகர் இறந்தபின்னர் சற்றேறக்குறைய நாற்பத்தைந்து வருடங்கள் அவர் உயிருடனிருந்திருக்கின்றனர். அவர், அரசரது முதன் மனைவியாரைப்போல் தாமும் பல கோயில்கள் எடுப்பித்து அவற்றிற்கு நிலங்கள் அளித்தனரென்று பலகல்வெட்டுக்கள் புகழ்ந்துரைக்கின்றன. நம் கண்டராதித்தர் கி.பி. 955-ல் இறந்தபோது இவரது புதல்வர் மதுராந்தக சோழர் என்பார். முடிசூடிக்கொண்டு அரசுபுரிதற்கு ஏற்ற பருவத்தினராயில்லை . ஆதலால் இவரது தம்பியாகிய அரிஞ்சயனென்பவர் இவருக்குப்பின்னர் ஆட்சிபுரியத்தொடங்கினர். அரிஞ்சயனும் அவரது புதல்வர் சுந்தரசோழரும் அரசாண்ட பின்னர், மதுராந்தக சோழர் கி.பி. 969-ல் முடிசூடிக்கொண்டு 16 வருடகாலம் ஆட்சிபுரிந்து கி.பி. 985-ல் விண்ணுலகெய்தினர் என்ப. மதுராந்தகசோழர் அவரது தாய்தந்தையராகிய செம்பியன்மா தேவியார், முதற்கண்டராதித்தர் என்ற மூவரது படிமங்களும் தஞ்சைஜில்லாவிலுள்ள கோனேரிராஜபுரம் சிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளன.