உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



31 பாடியவர் முதற்கண்டராதித்தரெனக்கெள்ளின், அவர், தம் தம்பியின் பெயரரது ஆட்சிக் காலத்தும் இருந்தவராதல் வேண்டும்; ஆனால், முதற்கண்டராதித்தர் இறந்த பின்னரே அவரது தம்பியாகிய அரிஞ்சயனென்பார் செங்கோல் கைக்கொண்டனரென்று கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன; எனவே, திருவிசைப்பாப் பாடியவர் முதற்கண்டராதித்தர் ஆகார்- என்பது, திருவிசைப்பாவிலுள்ள பதிகங்களுள் கண்டராதித்தர் இயற்றியது ஒன்றேயாகும். அப்பதிகமும் கோயிலெனப்படுந் திருச்சிற்றம்பலத்தைப் புகழ்வது. ராயர் அவர்கள் கூறியவாறு கண்டராதித்தர் இராசராசேச்சுரத்தைப்பாடிய பதிகம் திருவிசைப்பாவிற் காணப்படவில்லை. ஆனால், திருவிசைப்பாவிலுள்ள இராசராசேச்சுரப் பதிகம் கருவூர்த்தேவர் பாடியதாகும். கங்கைகொண்ட சோழீச்சுரத்தைப் பாடியவரும் இக்கருவூர்த் தேவரேயாவர். ஆகவே, கருவூர்தேவரியற்றிய இராசராசேச்சுரப்பதிகத்தைக் கண்டராதித்தர் இயற்றினாரெனப் பிழையாகக்கொண்டு, அதனால், திருவிசைப்பாப் பாடியவர் இரண்டாம் கண்டராதித்தர் என்று ராயர் அவர்கள் எழுதியிருப்பது தவறுடைத் தென்க. எனவே, முதற்கண்ட ராதித்தரே திருவிசைப்பாப் பாடியவ ரென்பது திண்ணம். இனி, கண்டராதித்தரது ஆட்சிக்காலம் மிகச்சுருங்கிய தொன்றேயாம். இவர், தம்கீழ்வாழுங்குடிகளிடத்தில் அன்பும் இரக்கமுமுடையவராய்ப் பல நற்கருமங்களைச் செய்துள்ளனர். இவர்காலத்திற் போர் முதலியன நிகழவில்லையாதலின், குடிகள் எல்லோரும் இன்புற்று வாழ்ந்துவந்தனர். ஆதலால், அன்னோர் தம் அரசர்பாற் பேரன்புடையராய், அவரைக் கடவுளின் அவதாரமென்றே கருதுவராயினர். இவருக்கு வீரநாரிணியார், செம்பியன்மாதேவியார் என்ற இருமனைவியர் இருந்துள்ளனரென்று தெரிகிறது. அவ்விருவருள் முன்னவர் இவரது வாழ்க்கையின் முதற்பகுதியிலிருந்தவர். அவ்வரசியார் பல கோயில்கள் கட்டுவித்துப் புகழுற்றாரென்று கி.பி. 931ல் வெட்டப்பெற்ற முதற்பராந்தக சோழதேவரது கல்வெட்டுக் கூறுகின்றது. இவரது வாழ்க்கையிற் பிற்பகுதியிற், பட்டத்தரசியாக விளங்கியவர் செம்பியன்மாதேவியார் எனப்படுவர். அரசரது இரண்டாம் மனைவியாகிய அவ்வம்மையார் மழநாட்டரசரது புதல்வியென்று கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. நமது கண்டராதித்தருக்கும் செம்பியம்மாதேவியருக்கும் மதுராந்தகன் என்ற ஒரு புதல்வர் பிறந்தனர். அவரை உத்தமசோழரென்று அழைப்பது வழக்கம். புதல்வர் பிறந்தவுடன் அரசர் வானுலகஞ்சென்றாரென்று லேய்டன் செப்பேடுகள் கூறுகின்றமையின் இவர் செம்பியன்மாதேவியாருடன் நெடுங்காலம் வாழ்ந்திருக்கவில்லையென்று தெரிகிறது. ஆனால், அவ்வரசியார் மாத்திரம் தம்நாயகர் இறந்தபின்னர் நீண்டகாலம் உயிருடனிருந்துள்ளனர். முதல் இராஜராஜ சோழ தேவரது ஆட்சியின் 16-ஆம் ஆண்டாகிய