பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



-30 - 7. முதற்கண்டராதித்த சோழதேவர் இவ்வரசர்பெருமான் சோணாட்டில், தஞ்சையில்வீற்றிருந்து அரசு புரிந்த சோழ மன்னர்களுள் ஒருவர்; முதற்பராந்தக சோழ தேவரது இரண்டாவது புதல்வர். இவரது தமையனாராகிய இராஜாதித்தன் என்பார் தக்கோலத்தில், கி.பி. 949-இல் இரட்ட அரசனாகிய கன்னா தேவனோடு புரிந்த பெரும்போரில் இறந்தமையின், பராந்தக சோழ தேவருக்குப்பின்னர் இவர் சோழமண்டலத்தின் அரசராக அரியணை யேறினர். அப்போரின்பயனாக, - பகைவனாகிய கன்னாதேவன் சோழமண்டலித்தின் வடக்கிற் சில பகுதிகளைக் கவர்ந்து கொண்டமையின் எஞ்சியவற்றையே கண்டராதித்தர் ஆண்டுவந்தவர். சோழமன்னர்கள் ஒருவர்பின் ஒருவராகத் தரித்துக்கொண்டு வந்த இராஜகேசரி என்றபட்டங்களுள் இவர் இராஜகேசரியென்னும் பட்டம் புனைந்தவர். கண்டராதித்தச் சதுர்வேதிமங்கலம் என்ற ஒரு நகரைக் காவிரியின் வடகரையில் இவர் தம்பெயரால் அமைத்தாரென்று லேய்டன் நகரச்செப்பேடுகள் கூறுகின்றன. அதுவே, இப்போது திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள கண்டாரதித்தம் என்ற ஊர்போலும். இவர் தமிழ்மொழியிற் சிறந்த புலமையும் சிவ பெருமானிடத்துப் பேரன்பும் வாய்ந்தவரென்பது இவர் பாடியுள்ள திருவிசைப்பாவினால் தெரிகிறது. திருவிசைப்பாவில் இவர் பாடிய பதிகங்கள் பல இருத்தல் வேண்டும். ஆனால், தற்காலத்திலுள்ளது 'மின்னாருருவமேல்விளங்க' என்னும் தொடக்கத்துக் கோயிற்பதிகம் ஒன்றே. அப்பதிகத்தின் எட்டாவது பாடலில், 'வெங்கோல் வேந்தன்றென்னாடு மீழங் கொண்டதிறற் - செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன்' என்று தம் தந்தையாராகிய முதற்பராந்தக சோழதேவரைக் குறித்திருப்பதோடு அவர் தில்லையம் பலத்திற்குப் பொன்வேய்ந்ததையும் கூறியுள்ளனர். அன்றியும், பத்தாம்பாடலில், காரார்சோலைக்கோழிவேந்தன்றஞ்சையர் கோன் கலந்த, - வாராவின் சொற்கண்டாதித்தன் என்று தம்மையே இவர் குறித்திருப்பது அறியத்தக்கதொன்றாகும். இஃதிங்ஙனமாக; சோழவமிசசரித்திரம் எழுதிய அறிஞர் து.அ.கோபிநாதராயர் அவர்கள் திருவிசைப்பர்ப்பாடியவர் இரண்டாங்கண்டராதித்தரென்று அந்நூலில் வரைந்துள்ளனர்; அதற்கு அவர்கூறும் காரணமாவது:- கண்டராதித்தர் முதல் இராஜராஜ சோழ தேவர் தஞ்சையில் எடுப்பித்த இராசராசேச்சுரத்தைத் தம் திருவிசைப் பாவில் பாடியிருக்கின்றனர்; முதல் இராஜராஜ சோழதேவர், முதற்கண்டராதித்தரது தம்பியாகிய அரிஞ்சயன் என்பாரது பெயரர்; சுந்தரசோழரென்று அழைக்கப்பெறும் இரண்டாம்பராந்தக சோழரது புதல்வர்; ஆதலால், தஞ்சை இராசராசேச்சுரத்தைத் திருவிசைப்பாவிற்