பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



முனைவர் ச.சு. இராமர் இளங்கோ இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை - 600 113. அணிந்துரை அண்ணாமாலைப் பல்கலைக் கழகம் மொழி, இன உணர்வுள்ள பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை உருவாக்கிய அறிவுப் பாசறை. அப்பாசறையில் பணியாற்றியவர் அறிஞர் பெருமகனார் பேராசிரியர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். காட்சிக்கு எளியவராகவும், கடுஞ்சொல் அற்றவராகவும், ஆழ்ந்த புலமைமிக்கவராகவும் அமைதியின் திருவுருவமாகவும் திகழ்ந்தவர் பேராசிரியர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். - - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சதாசிவப் பண்டாரத்தாரின் பண்பு நலன்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'செந்தமிழ்ப் பேராசிரியர்; வரலாற்றின் ஆய்வாளர்; புலவர் சென்றே எந்த இடம் கேட்டாலும் அந்த இடம் இந்த இடம் என்று காட்டும் முத்துபேர் இலக்கியத்து முழங்கு கடல்; ஒழுக்கத்தின் எடுத்துக் காட்டு; நத்துதமிழ்ப் புலவர் குழு மணிவிளக்கு . . . . . . . . . . ' என்று பாராட்டியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சதாசிவப் பண்டாரத்தார், தொல்காப்பியப் பாயிரவுரை, முதற் குலோத்துங்கன், பாண்டியர் வரலாறு, சோழர் வரலாறு (3பகுதிகள்) செம்பியன் மாதேவி, கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள், காவிரிப்பூம்பட்டினம், தமிழ் இலக்கிய வரலாறு (250-600) 13,14,15 நூற்றாண்டு, கருணாகரத் தொண்டைமான் முதலிய நூல்களை ஆக்கியுள்ளார். இவருக்கு முன்னர்த் தமிழ் வரலாறு எழுதிய அறிஞர் பெருமக்கள் கொண்ட ஐயங்களையும், தவறான முடிவுகளையும் முடிந்த முடிவு காணாத கருத்துகளையும் தம் ஆய்வு மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் பாமொழியில் சொன்னால் 'உருப்படியா