பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வரலாற்றை உருப்படச் செய்தார்.' எடுத்துக் காட்டாக அவர் கண்டறிந்த கேன் வருமாறு: வரலாற்று உண்மைகள் வருமாறு: - - 1. சங்க காலத்தின் முடிவு களப்பிரர் ஆட்சியின் தொடக்கம் ஆகும். 2. பழையாறு சோழர்களின் தலைநகராக ஏழு, எட்டு நூற்றாண்டு களில் விளங்கிற்று. 3. ராஜசிம்ம பல்லவர் காலத்தவர் சுந்தரர். தேவாரப் பாடல்களைத்தொகுத்த நம்பியாண்டார் நம்பி முதலாம் ஆதித்தன் காலத்தவர். 5. சுந்தரச் சோழன் முதலாம் ஆதித்தனைக் கொலை செய்யத் தூண்டவில்லை. 6. தமிழக வரலாற்றில் குறிப்பிடப்படும் ராஜராஜன் பற்றியத் தெளிவு 4. இத்தகைய ஆய்வுப் பேரறிஞர் பெருமகனார் பேராசிரியர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் பல்வேறு இதழ்களில் எழுதிய, இதுவரையிலும் வெளிவராத வரலாற்றுக் கட்டுரைகள் 'சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்' என்ற தலைப்பில் முதன் முதலாக நிறுவன வெளியீடாக வெளிவருகிறது. வரலாற்றுக் கருவூலமாக விளங்கும் சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் எழுதிய இவ்வரிய கட்டுரைகளைத் தொகுத்துத் தந்த அருமை நண்பர் முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி அவர்களுக்கும், இக்கட்டுரைத் தொகுப்பினை வெளியிட அனுமதி அளித்த பேராசிரியர். தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் குடும்பத்தார்க்கும் நன்றி. நிறுவன வளர்ச்சியில் ஆக்கமும் ஊக்கமும் காட்டி வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி-பண்பாட்டுத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களுக்கும், நிறுவன மேம்பாட்டுக்குத் துணை நிற்கும் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறைச் செயலாளர் திருமிகு. த.இரா. சீனிவாசன் இ.அ.ப. அவர்களுக்கும், அரிய நூல்கள் வெளியிடும் திட்டத்தின் கீழ் நிதி வழங்கிய தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ச.நாகராசன் அவர்களுக்கும், எங்கள் நன்றி. இந்நூலினை வனப்புற அச்சிட்டுத்தந்த பாவை அச்சகத்தார்க்கு எங்கள் நன்றி. 16.02.1998 இயக்குநர்