பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



38 ஈடுபெ ருக்கிய போர்களின் மேகமி ளைத்தேற நீடுவ ளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு. (11) பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகண் மேலோடும் வெங்கதிர் தங்கவி ளங்கிய மேன்மழ நன்னாடாம்அங்கது மண்ணில ருங்கல மாகவ தற்கேயோர் - மங்கல மாயது மங்கல மாகிய வாழ்மூதூர். (12) என்னும் பாடல்களால் சோழநாட்டின்கண் மழநாடென்ற தோர் உண்ணாடுள்ளமை நன்கு தெளியப்பெறும். சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவராய ஆனாயநாயனார் அவதரித்த திருப்பதியாகிய திருமங்கலமும் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பெற்ற திருப்பாச்சிலாச்சிரமும் இம்மழ நாட்டின்கண் உள்ளமை மேலே காட்டியுள்ள பாடல்களால் இனி துணரப்படும். அன்றியும் அன்பிலாலந்துறை, திருமாந்துறை, திருப்பழுவூர், திருமழபாடி, திருவிசயமங்கை(13) முதலிய பாடல் பெற்ற திருப்பதிகள் இந்நாட்டின் கண்ணுள்ளனவேயாகும். ஆகவே, இம்மழநாடு கொள்ளிடத்தின் வடகரையைச் சார்ந்ததாய், ஐயன்வாய்க்கால் பெருவளவாய்க்கால் முதலிய கால்வாய்களாற் பாயப்பெற்றுத் திருச்சிராப்பள்ளி சில்லாவில் கீழ்மேல் பலகாத தூரம் நீண்டு கிடந்ததொரு நாடாதல் வேண்டும். இஃது ஆசிரியர் சேக்கிழார்காலத்தில் சோழநாட்டின் உள்நாடுகளில் ஒன்றாக விருந்ததென்பதை அப்பெரியாரது செந்தமிழ்ப் பாடல்கள் கொண்டு இனிது விளக்கினேம். ஆனால், சங்கத்துச்சான்றோர்கள் இயற்றியுள்ள தொகைநூல்களில் காணப்பெறும் பாடல்களால் (14) இந்நாடு சேரநாட்டின் ஒரு பகுதியையும் சடைச்சங்க நாளில் தன்னகத்து அடக்கிக்கொண்டிருந்தமை நன்குபெறப்படுகின்றது. ஆகவே, மழநாடு சேரநாட்டின் கீழ்ப்பகுதியையும் சோழநாட்டின் மேற்பகுதியையும் தன்பால் அடக்கிக்கொண்டு. பண்டைக்காலத்தில் ஒரு பெரிய நாடாகவே இருந்துள்ளது. இதனால் இந்நாட்டில் வசித்துவந்த மழவர்குடியினர் தமிழகத்தில் பழைய மக்களேயன்றி இடைக்கண் இங்குக்குடியேறிய வரல்ல ரென்பது நன்கு விளங்குதல் காண்க. 11. 12. மேற்படி ஆனாய நாயனார் புராணம் -1, 7. 13. இத்திருப்பதி இப்போது கோவிந்தபுத்தூர் என்ற பெயருடன் கொள்ளிடத்தின் வடகரையில் திருப்புறம்பயத்திற்கு வடமேற்கில் இரண்டுமைல் தூரத்தில் இருக்கிறது. 14. மழவர்மெய்ம்மறை என்று சேரனைப்புகழும் பதிற்றுப்பத்து அடிகளால் மழநாடு சேர நாட்டின் உட்பிரிவுகளிலும் ஒன்றாயிருந்ததென்பது புலனாகின்றது. மழவர்பெருமானாகிய அதிகமான் நெடுமானஞ்சியினது தலைநகராகிய தகடுரும் அவனது குதிரை மலையும் அக்குடியிற்றோன்றிய குறுநிலமன்னனாகிய வல்வில்லோரியினது கொல்லிக்கூற்றமும் சேரநாட்டின் கீழ்ப்பகுதியிலுள்ளமை எமது கொள்கையையே வலியுறுத்துகின்றது. அன்றியும், பூவிரியும் பொழிற்சோலைக்காவிரியைக் கடந்திட்டழகமைந்த வார்சிலையின் மழகொங்கமடிப்படுத்தும்" என்ற வேள்விக்குடிச் செப்பேட்டிற்கண்ட அடிகளால் கொங்குநாட்டின் ஒரு பகுதியும் மழவர்க்குரித்தா யிருந்ததென்பது வெளியாகின்றது.