37 “வண்புகழ் மூவர் தன்பொழில் வரைப்பில் - நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்" (7) என்ற தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரத்தால் நன்கறியக் கிடக்கின்றது. இம்மூன்று பெரும்பிரிவுகளும் பல உள்நாடுகளை யுடையனவாயிருந்தனவென்பது பழைய - தமிழ் நூற்களையும் கல்வெட்டுக்களையும் ஆராய்வார்க்கு இனிது புலப்படும் (8). ஆகவே, இம்மூன்று பெரும்பிரிவுகளுள் அடங்கியுள்ள பலஉள்நாடுகளில் மழநாடும் ஒன்றாயிருத்தல் வேண்டும். தாயவன் யாவுக்குந் தாள்சடை மேற்றனித்திங்கள் வைத்த தூயவன் பாதந் தொடர்ந்து தொல் சீர்துளை யாற்பரவும் வேயவன் மேன்மழ நாட்டுவிரிபுனன் மங்கலக்கோ னாயவ னானாய னென்னை யுவந்தான் டருளினனே (9) என்ற நம்பியாண்டார் நம்பிகளது திருவாக்கினாலும் உறுதியெய் துகின்றது. இதற்கேற்ப ஆசிரியர் சேக்கிழார், திருஞானசம்பந்த நாயனார் புராணத்திலும் ஆனாய நாயனார் புராணத்திலும் முறையே கூறியுள்ள அங்கணகன்றம்மருநகிலங்கணர் தம் பதிபலவுமளைந்து போற்றிச் செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும் வயன்மதுவாற் சேறு மாறாப் பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய்ப் புகலிவேந்தர் நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிரா மம்பணிய நண்ணும் போதில்(10) மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச் சூடுப ரப்பிய பண்ணைவ ரம்புசு ரும்பேற 7. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் சூத்திரமம் - 1. 8. சோழநாட்டில் பல உண்ணாடுகள் உளவென்பதை அடியிற் குறித்துள்ளவற்றால் அறிக. 1. "அகன்பாணைநீர் நன்னாட்டு மேற்காநாட்டாதனூர் பெரிய புராணம். திருநாளைப்போவார்-1. 2. "தள்ளும்பொன்னி நீர்நாட்டு மருகநாட்டுத் தஞ்சாவூர்" - பெ.பு.செருத்துணையார் -1. 3. 'நீதிவழுவா நெறியினராய் நிலவுங் குடியானெடுநிலத்து மீதுவிளங்குந் தொன்மையது மிழலைநாட்டுப் பெருமிழலை பெ.பு.பெருமிழலைக்குறும்பர் -1, 4 செழுந்தளிரின் புடைமறைந்த பெடைகளிப்பத் தேமாவின் கொழுந்துணர் கோதிக்கொண்டு குயினாடு கோனாடு" பெ.பு.இடங்கழியார்-1, 9. திருத்தொண்டர் திருவந்தாதி -15. 10. பெரியபுராணம் - திருஞானசம்பந்தநாயனார் புராணம் -310.