பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



36 - வேளாளர் என்றழைக்கப்பெறுதல்காண்க. இதுகாறும் கூறியவாற்றால் நாட்டின் அடியாகத் தோன்றிய குலப்பெயர் தனித்து வழங்கிவரின். அஃது அந்நாட்டின் அரசர் குலத்தினரையே குறிக்குமென்பது மிகத் தெளிவாய் விளங்குகின்றது. இது நூல்வழக்கானும் உலகவழக்கானும் ஓருங்கே உறுதியெய்துதல் காண்க. - இத்துணையும் கூறியவாற்றால், நாம் அறிந்து கொள்ளுமாறு முயன்ற 'மழவர்' என்பார் மழநாட்டில் வசித்தோர் ஆதல் வேண்டு மென்பது நன்கு புலப்படுகின்றது. நாட்டினடியாகப் போந்த 'மழவர்' என்ற குடிப்பெயர் - பிறகுலப்பெயரோடு இணைந்து வழங்கப் பெறாது - தனித்து வழங்கிவருதலைச் - சங்க நூல்களின் காண்கின்றோமாகலின் இன்னோர் (மழவர்) அந்நாட்டில் அரசு புரிந்துவந்த அரசர் குலத்தினராதல் தெள்ளிது. இதனால் மழநாட்டிலுள்ள அரசர்குலத்தினரே சங்கத்துச் சான்றோர்களால் 'மழவர்' என்று வழங்கப்பெற்றுள்ளனரென்பது இனிதுணரப்படுகின்றது. இன்னோர், மழ நாட்டினடியாகத் தோன்றிய 'மழவர்' என்ற குடிப்பெயரையே தமக்குரிய குலப்பெயராகக் கொண்டுள்ளமையால் இவர்களது தாய்நாடு மழநாடாகுமென்பது நன்கறியப்படும். இம்மழநாடு 'மழபுலம்' (5) என்றும் அழைக்கப்பெறும். இனி, இம்மழநாடு யாண்டுள்ளதென்பதை யாராய்வாம். இது தமிழ்மொழிக்கே சிறப்பெழுத்தாயுள்ள 'ழ'கரம் பயின்றுள்ள பெயருடையதாயிருக்கின்றது. ஆதலால், இது நம் தமிழகத்தில் அடங்கியுள்ளதொரு நாடாதல்வேண்டும். ஆசிரியர் தொல்காப்பிய னாரானும் பவணந்தியாரானும் கூறப்பெற்ற செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ள பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளுள் (6) மழநாட்டின் பெயரைத் தொல்காப்பியத்திற்குரைகண்ட பெரியாருள் எவருங் கூறக்கண்டிலம். உரையாசிரியர்களால் கூறப்பெறாத பல நாடுகள் நம்தமிழகத்தில் உளவென்பது, தொண்டைநாடு, கொங்குநாடு, திருமுனைப்பாடி நாடு முதலியவற்றால் தெளியப்படும். அங்ஙனம், உரையாசிரியர்களால் விதந்தோதப்படாத பலநாடுகளுள் மழநாடும் ஒன்றாயிருத்தல் வேண்டும். அன்றியும், தமிழகம் சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு என்ற மூன்று பெரும்பிரிவுகளை யுடையதாயிருந்ததென்பது, 5. கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் (அகம்.61.) அகநானூற்றின் முற்பகுதியிலுள்ள சில பாடல்களுக்குக் குறிப்புரை எழுதியுள்ள பண்டையாசிரியர் 'மழபுலம்' என்பதற்கு மழநாடு என்று பொருள் எழுதியுள்ளார். - 6. கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன :- தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புனனாடு.