35 பரத்தையரும் காமக்கிழத்தியருமென இருவகைப்பிரிவனராய் வாழ்ந்த வரைவின்மகளிராவர். இதுகாறும் யாம் கூறிய வகுப்பினர்களே முன்னர் தமிழ் நாட்டில் வசித்த பழந்தமிழ்க் குடிகளாவார். அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரும் அகநகர்க்கண்ணும் ஐந்திணைமக்கள் குறிஞ்சி, முல்லை முதலிய நிலங்களிலுள்ள சிற்றூரின்கண்ணும் வசித்துவந்தனர். தொழிலாளரும் குற்றேவன்மாக் களும் புறநகர்க்கண் சேரிகளில் வசித்தனர். பரத்தையயர் அகநகரில் வாழ்ந்துவந்தனர். அறிவரும் தாபதரும் யாண்டும் வசித்தற்குரியர். ஆனால் வடுகர் முதலான தமிழரல்லாத பிறசாதியினரும் தமிழகத்தில் தற்காலத்தில் வாழ்ந்துவரினும், இன்னோர் பழந்தமிழ் மக்களல்லராதலின் இவர்களைப் பற்றிய ஆராய்ச்சி ஈண்டைக் கேற்புடைத்தன்றென்க. இனித் தொல்காப்பியத்திற் கூறப்பெற்றுள்ள பல்வகைக் கூட்டத்தினருள் 'மழவர்' என்பார் கூறப்படவில்லை . எனவே அன்னவர் மேற்குறித்துள்ள பிரிவினருள் அடங்கியுள்ளவராதல் வேண்டும். இன்றேல், பிறநாட்டினின்றும் போந்து தமிழகத்தில் குடியேறியுள்ள வேறு தேய மக்களாதல் வேண்டும். ஈண்டு இதனையாராய்ந்து உண்மைகாண்போம். சாதிப்பெயர், இடம்பற்றியும் தொழில்பற்றியும் உண்டாகுமென்பது ஆசிரியர் தொல்காப்பியனாரது கருத்தாகும். எனவே, சேரநாட்டில் வசிப்போர் எல்லோரும் சேரரும், பாண்டியநாட்டில் வசிப்போர் எல்லோரும் பாண்டியரும், சோழ்நாட்டில் வசிப்போர் எல்லோரும் சோழரும் ஆதல் வேண்டும். ஆயின், பண்டைநூற்களிலும் கல்வெட்டுக்களிலும் பயின்றுள்ள சேரர் பாண்டியர் சோழர் என்ற இடத்தாற்போந்த குடிப்பெயர்கள் அந்நாடுகளில் தொன்று தொட்டு ஆட்சிபுரிந்து வந்த அரசர் குலத்தினரைக் குறிக்கின்றனவேயெனின், கூறுவாம்; ஒரு நாட்டில் வசிப்போர் பல்வகைக் குலத்தினராயினும், அந்நாட்டின் அடியாகத் தோன்றிய குலப்பெயர்கள் அந்நாட்டில் தொன்றுதொட்டு அரசுரிமையெய்தியுள்ளார்க்கே யுரியதாகும். பிறகுலத்தினரிருப்ப, சேரர், பாண்டியர், சோழர் முதலிய நாட்டடியாகப் போந்த குலப்பெயர்கள் அந்நாடுகளிலுள்ள அரசர் குலத்தினரையே அவ்வாறு குறிப்பது சிறப்புப்பற்றியே யாமெனவுங்கொள்க. இனி, அந்நாடுகளில் வசிக்கும் பார்ப்பார், வணிகர், வேளாளர் முதலிய பிறகுலத்தினரைக் குறிக்குங்கால் அந்நாடுகளின் அடியாக மருவிப்போந்த பெயரோடு அன்னோரது குலப்பெயரையும் இணைத்துக்கூறுதல் வழக்காறாக உள்ளதென்பதை யாவரும் அறிவர். உதாரணமாக, சோழநாட்டில் வசிக்கும் பார்ப்பார், வணிகர், வேளாளர் என்ற இன்னோர் சோழியப்பார்ப்பார், சோழியச்செட்டி, சோழிய