பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



40 வேந்தனும் முதல் மகேந்திரவர்மனது தந்தையுமாகிய சிம்மவிஷ்ணு வென்பான் தென்னாட்டின்மீது படையெடுத்துப் பாண்டியர், சோழர், கேரளர், மழவர் என்ற மன்னவர்களை வென்றானென்று காசாக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன (30). இதனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலும் மழவர் குடியினர் சேரபாண்டிய சோழரோடு ஒருங்குவைத் தெண்ணப்படும் பெருமையுடையராயிருந்தனரென்பது தெளிவாகின்றது. கி.பி. எட்டாம் நூற்றாண்டினிடையில் பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்தவனும் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன் என்று செப்பேடுகளில் குறிக்கப் பெற்றவனுமாகிய முதல் இராச சிம்ம பாண்டியன் ஒரு மழவ அரசனது புதல்வியை மணந்து கொண்ட செய்தி வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது (31). -- - அன்றியும், திருவிசைப்பாவிலுள்ள பதிகங்களுள் ஒன்றைத் திருவாய் மலர்ந்தருளிய முதற்கண்டராதித்த சோழதேவர் மழவர் குடியிற்றோன்றிய ஒரு பெண்மணியைத் திரும்ணஞ்செய்து கொண்டாரென்பது கல்வெட்டுக்களால் -- வெளியாகின்றது (32). இன்னோர்க்குப் பிறந்த அருமைப் புதல்வனே உத்தமச் சோழனென்று புகழப்பெறும் மதுராந்தகச் சோழனென்பான் (33). இம்மன்னன் இராசராசசோழனது ஆட்சியின் முற்பகுதியில் அவனோடு சேர்ந்து சோழநாட்டை ஆட்சிபுரிந்தவன். இவற்றால், ஏழு, எட்டு, பத்து, பதினோராம் நூற்றாண்டுகளிலும் மழவர் குடியினர் சிறந்துவாழ்ந்தமை நன்கு பெறப்படும். இக்காலத்தே இவர்கள் சோழர்கட்கு அடங்கிய குறுநில மன்னராகவும், அன்னோர்க்குப் படைத்தலைவராகவும் மந்திராலோசனை சபையின் அங்கத்தினராகவும் இருந்துள்ளனர் (34). -- ஆகவே, நெடுமுடிவேந்தராகிய சேரபாண்டிய சோழரது நிலைகுலைய, பிறர் இத்தமிழகத்தைக் கைப்பற்றிய நாட்களில்தான் மழவரும் தங்கள் பண்டைப்பெருமையிற் சுருங்கித் தாழ்ந்த நிலையை யெய்தத் தலைப்பட்டனர். ; இனி, இம்மழவரது வழித்தோன்றல் களாகத் தற்காலத்தே யுள்ளவர் யாவரென்பதை ஆராய்வாம். (தொடரும்) குறிப்பு : இதன் தொடர்ச்சி கிடைக்கவில்லை.