பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



43 இத்தர்மத்தைச் செய்யாமல் நிறுத்துவோர் கங்கைக் கரையிலும் குமரிக்கரையிலும் குரால் பசுவைக்கொன்றவனது பாவத்தையடைவர் என்று வரையப்பட்டுள்ளது. இதனால் செங்கேணி என்பது குடிப்பெயர் என்று வெளியாகிறது. மூன்றாம் குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டில் (கி.பி. 1189) செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைய பெருமானான விக்கிரமசோழச் சம்புவராயன் பலவரிகளால் கிடைக்கும் வருவாய் களைத் திருவல்லமுடையார்க்கு அளித்தனன். (S. I. I. Vol. II1 No. 61) முன்னவனுக்குப் பின்னவன் யாது முறையுடையான் என்பது இப்போது புலப்படவில்லை. 'சோழச்சம்புவராயன்' என்னுஞ் சொற்றொடர் இம்மரபினர் அப்போது சோழமன்னர்க்குக் கப்பஞ் செலுத்திவந்த சிற்றரசராயிருந்தனர் என்பதைப் புலப்படுத்துகின்றது. அன்றியும் பலவரிகளால் கிடைக்கும் வருவாய்களை அவன் திருவல்ல முடையார்க்கு அளித்திருப்பது அப்பகுதி அவனது ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதை நன்கு விளக்குகின்றது. இவ்வரசனது புதல்வன் செங்கேணி விராசனி அம்மையப்பன் தனிநின்று வென்றான் தன்வசி காட்டுவான் அழகிய சோழனான எதிரிலி சோழச் சம்புவராயன் என்போன். இதனைக் காஞ்சிபுரத்திலுள்ள அருளாளப்பெருமாள் கோயில் கல்வெட்டொன்று 'அம்மையப்பன் மகன் சோழப்பிள்ளையான அழகிய சோழச்சம்புவராயன்' என்றுரைப்பதால் நன்குணரலாம். (Ins. 36 of 1893) இவனது கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 27-ஆம் ஆண்டாகிய கி.பி.1205-ல் தான் முதலில் காணப்படுகிறது. ஆகவே அக்காலத்தேதான் இவன் ஆட்சிபுரியத் தொடங்கியிருத்தல் வேண்டும். இவன் காலத்தில் பாண்டிநாட்டில் பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் ஆட்சியுரிமையைப்பற்றிய விவாதம் உண்டாயிற்று. பராக்கிரம பாண்டியனுக்கு இலங்கைமன்னனாகிய பராக்கிரமபாகு என்பான் துணைப்படை யனுப்பினான். இலங்கைப் படைக்குத் தலைவனாக வந்தவன் இலங்காபுரித் தண்டநாயகன். குலசேகர பாண்டியனுக்குச் சோழமன்னர்கள் உதவி புரிந்தனர்.. சோழர்களது படைக்குத் தலைமைவகித்து மகாசாமந்தனாகச் சென்றவன் நமது எதிரிலி சோழச்சம்புவராயனது புதல்வனாகிய திருச்சிற்றம்பலமுடையான் பிள்ளைப் பல்லவராயன் என்பவனேயாம். பாண்டி நாட்டில் இராமேச்சுரம், திருக்கானப்பேல், தொண்டி, பொன்னமராவதி, மணமேற்குடி முதலான இடங்களில் இவ்விரு படைகட்கும் பெரும்போர்கள் நிகழ்ந்தன. முதலில் சிங்களப்படை வெற்றிபெற்றது. அதன் பயனாகப் பல நகரங்களும் கோயில்களும் இடிக்கப்பட்டன. இச்செய்திகளைக் கேள்வியுற்ற எதிரிலி