உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



64 . கள் புத்திரன் அருணாசலவணங்காமுடி தொண்டைமானாரவர்கள், திருப்பெருந்துறையாவுடைய பரமசுவாமியார்க்கு உஷாகாலபூசைக்குப் பரதேசிமுத்திரை அம்பலத்தாடுபண்டாரம்பாரிச மாகநடக்கிற தனது அபிஷேகக் கட்டளைக் கிராமங்களுக்கெல்லாம் சருவமான்னியமாக தருமசாசன பட்டயம் கொடுத்தபடி கிராமங்களாவது கல்லிங்க நாடு, பைங்கானாடு தானவனாட்டில் காலகம் உள்ளூர் உக்கடை பழநகரம்படி வெள்ளாற்று நாட்டில் சிறுவயல், ஈச்சுங்குடி, காரணிநாடு, ஆலையேம்பல், ஒ(த) ய மாணிக்கம், மானவ நல்லூர், களக்குடி, எய்யமங்கலம், பெருங்காடு, விளங்குளம்வட்டத்து அஞ்சில் ரெண்டு சீமையில் முலவயல் திருமழலைநாட்டு வெள்ளாம்பற்றில் புண்ணிய வயல், எழுநூற்றுமங்கலம், உலகந்தனியேந்தல், இரையாமங்கலம், தவசியார்பட்டமங்கை, சித்திரலிடங்கம், மங்கலம், கொனப்பன்வயல், கீழகாரை, காட்டுக்குடி, இரும்பானாடு, தொமொகிநாட்டுப்பற்றில் மதகம் தாணிக்காடு தில்லைவயல் செய்யிவயல் திருவாகுடி இது முதலாக அபிஷேக கட்டளைக்கு நடக்கிற கிராமங்கள் ஏந்தல் உள்கிடைக்கெல்லாம் இரைவரிமுதலாக ஊழியமுள்பட சகலமும் வேண்டாமென்று சருவமானியமாக கட்டளையிட்டோம், ஆனபடியினாலே யியாக அபிஷேகக் கட்டளைக்குமான்னியமாக அனுபவிச்சுக் கொள்ளக் கடவதாகவும், நம்மைச் சார்ந்த மனுஷர்மக்களெல்லாம் இந்த தர்மசாதனப் பட்டயப்படிக்கு ஒரு சில்லரையளும் வாராமல் புண்ணியத்தைப் பரிபாலனம்பண்ணி பூர்வாபூர்வம் நடந்தபடியே உத்தரோத்தரமாக நடப்பிக்கக்கடவோனாகவும். இந்தப்படிக்கு திருப்பெருந்துறையாவுடைய பரமசுவாமியருக்கு அம்பலத்தாடும் பண்டாரத்தின் பாரிசமாகநடக்கிற தனது அபிஷேகக் கட்டளைக் கிராமங்களுக்கெல்லாம் நாம் மனப் பூர்வமாக அபிமானிச்சு சருவ - மாண்ணியமாக கட்டளையிட்டு தர்மசாதனப்பட்டயம் கொடுத்தோம் இந்த தர்மத்தைப் பரிபாலனம் பண்ணினவர்கள் கெங்கைக்கரையிலும் ஆதிசேதுவிலும் கோடி பிருமபிரதிட்டையும் கோடி சிவலிங்கபிரதிட்டையும் பண்ணின தர்மத்தையடைவாராகவும். இந்ததர்மத்துக்கு யாதாமொருவர் விகாதம் பண்ணினவர்கள் கெங்கைக்கரையிலும் ஆதிசேதுவிலும் கோடிகோவை வதை பண்ணின தோழத்திலும் மாதாபிதாவைவதைபண்ணிண தோழ்த்திலும் போவர்களாகவும்: (ஒப்பம்) இந்த தர்மசாதனப்பட்டயம் எழுதினேன் கோவில் கணக்கு சித்திரபுத்திரன் மகன் அவாத்தரன் யெழுத்து. யாதாஸ்து :- அசலாதிரவுமுன்புரம் தலப்பிர் உபதேச அவசரமாக பிரதிமையளும் பீடத்தின்...மும் எழுதியும் ரு . . . எழுத்துக்களையும்...கி மேலாக உ எழுத்துக்களையும் ஒட்டியும் ஓரங்களில் உ இடத்தில் வீரியும் நடுவில் இடத்தில் துவாரம் விழுந்தும் பாசிபுடித்துமிருக்கிறது மல்லாமல் மேற்படி பின்புறம் ரு