பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



13. தொண்டைமான் சாசனம் இதன்மேல் செல்லாநின்ற நந்தனநாம (ர) த்து உத்தராயணத்து வில் மாகமாசத்து பூருவபட்சத்தில் சுக்கிரவாரமும் சத்தமியும் ரோகணிநட்சத்திரமும் சுபயோக சுபகரணமும்பெற்ற புண்ணிய தினத்தில் மண் மகாமண்டலேசுரன், அரியராயிரதன் விபாடன் பாஷைக்குத் தப்புவராயிரகண்டன் முவாயிரகண்டன் கண்டனாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பூருவ தெட்சிண பச்சி மோத்தர திக்கு விசயஞ் செய்து எம்மண்டலமும் திறைகொண்டருளிய ராசாதிராஜன் துலுக்கர் தளவிபாடன் துருக்கர்மோகந் தவிழ்த்தான் ஒட்டியர்தளவிபாடன் ஒட்டியர்மோகந்தவிழ்த்தான் பாண்டி மண்டலத்தாபனாச்சாரியன் சோழமண்டலபிரதிட்டாசாரியன் தொண்டைமண்டலதுரந்தராதிபன் கீர்த்திப்பிரதாபன் வீரப்பிரதாபன் புவனேகரவீரன் சிவபூசாதுரந்தரன் சிவகாரியாதுரந்தரன் வடவெள்ளாறு சுந்தரபாண்டியவளநாட்டு இளங்கோனாட்டு அறந்தாங்கி அரசு அச்சமறியாதான் ஆட்டுக்கு ஆணை வழங்கு மதுளன் சேரன்பாட செந்தமிழ்ப்புனைந்தபுங்கவன் கருதுமாசாகா கமலசந்திரன் கொற்றக்குடையும் தவண்டையுமுள்ள குணசீலன் தன்னையடைந்தாரை தானாககாக்குமபிராமன் நடைகற்ற போதொருடை கற்றதீரன் ஏழுநாழிகையில் ஈழந்திறைகொண்ட பெருமாள் புற்று மாத்தியும் பொந்தாலும் போகேளென்றுவென்ற புரந்தரன் தலைமலைகண்டான் பிணமலைகண்டான் முகவின் கிழத்திரியு மிளவன்னியமிசுரகண்டன் திருமிழலைத்திருநாடன் மல்லையாபதி மயிலையாதிபதி அவ்வைக்கனிகொண்டவன் செயனைவென்றவன் பட்டனுக்கு முதுகு சாய்த்தான் மரைபுக்கார் காவலன் அடியார் வேலைக்காரன் காஞ்சிபுராதீஸ்வரன் ஆளுடைய தம்பிரானார் து அவுடைய றெகுநாத வணங்காமுடி தொண்டைமானாரவர் 1. இவன் கடைச்சங்கநாளில் கச்சி நகரத்திருந்து ஆட்சிபுரிந்து தொண்டைமான் இளந்திரையன் வழித்தோன்றினோனாவன். இப்பகுதியினர் சோழர் வழித்தோன்றி நாடாட்சி தனியேயளிக்கப் பெற்றோராவர். இதனை நன்கு விளக்கக்கூடிய பழஞ்சரித மொன்றுளது. அதாவது நாகப்பட் டினத்துச் சோழனொருவன் நாகலோகஞ் சென்று ஓர் நாககன்னியைப்புணர, அவள் யான் பெற்ற புதல்வனை என்செய்வேனென்றபோது தொண்டைக்கொடியை யடையாளமாகக்கட்டிக் கடலில் விட (டு) அவன் வந்து கரையேறின் அவனுக்கு யான் அரசுரிமையும் நாடாட்சியும் நல்குவேனென்று அச்சோழன் கூற அவளும் தன் புதல்வனை அங்ஙனம் வரவிட, அவனைத் திரை கொணர்ந்தமையால் அவனும் அவன் வழித் தோன்றினோரும் திரையன் திரையர் எனப்பெயர் பெற்றதோடு அவன் வழியினரெல்லாம் தொண்டைமேசூடிப் போந்தகாரணத்தால் தொண்டைமான்கள் எனவும் வழங்கப்படனரென்பதேயாம். இவ்விஷயம் மேற்கூறிய தொண்டைமான் இளந்திரையன்மீது கடியலூருத்திரங்கண்ணனார் பாடியுள்ள பெரும்பாணாற்றுப் படையானும் அதற்கு நச்சினார்க்கினியர் கூறிய வுரையானும் நன்கு தெளியப்படும். இனி, தொண்டைமான்கள் ஆட்சி புரிந்த நாடும் தொண்டை நாடென வழங்கப்பெற்றது போலும். இச்சாசனத்தில் சொல்லப்படும் அருணாசல வணங்காமுடித் தொண்டைமானது வம்சத்தினர், தஞ்சை ஜில்லா பட்டுக்கோட்டைத்தாலூகாவில், இக்காலத்துமிருக்கிறதாகச் சிலர் கூறுகின்றனர்.