உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



73 6. விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான் கண்ணணாரூரன் இவனே ஸ்ரீராஜராஜ கிணற்றில் தொட்டிக்கு நீரிறைப்பார்க்கு அருமொழிதேவன் மரக்காலால் நிசதம் நெல் உங (குறுணி) ஆ 7. கத் திங்கள் -க்கு நெல்* முப்பது கலமும் ஸ்ரீராஜராஜன் தண்ணீராட்டுவார்க்கு நிசதம் நெல்* (குறுணி) ஆக திங்கள் க்கு நெல்லு கல்மும் இப்பந்தலுக்கு குசத்கலம் இடு. 8. வார்க்கு திங்கள் க-க்கு நெல்லு 3/4 (இருதூணி) ஆக திங்கள் (உ)-க்கு நெல்லு கலமும் ஸ்ரீராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆட்டாண்டுதோறும் புதுக்குப் புறமாக வைச்ச 9. நெல்லு உ கலம் 3/4 (இருதூணி) ஆக நெல்* கலம் 3/ 4 (இருதூணி) இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸபையோம் இறைத்திரவியமும் கிரையத்ரவியமும் கொண்டு இறை இழிச்சி...... இக்கல்வெட்டினால் பல செய்திகள் (South Indian Inscriptions Volume III No.44) அறியக்கிடக்கின்றன. இதில் குறிக்கப் பெற்றுள்ள கோராஜ கேசரி வர்மன் இராஜராஜன் சுந்தரசோழன் என்று வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனது மகன்; தஞ்சைமாநகரிலுள்ள இராசராசேச்சுரம் என்னும் திருக்கோயிலை எடுப்பித்த பெருமையுடைவன் ; கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரையில் சோழ மண்டலத்தையும் பிற மண்டலங்களையும் சிறப்புடன் ஆட்சிபுரிந்த பெருந்தகையாளன்; இவ்வேந்தனது திருப்பெயரால் இராஜராஜன் கிணறு அமைக்கப்பட்டது. இக்கிணற்றைச் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உக்கல் என்ற ஊரில் தன் அரசன் பெயரால் அமைப்பித்துத் தண்ணீர் இறைத்தற்கு நிபந்தம் விட்டவன் முதல் இராஜராஜ சோழனது பணிமகனும் சோழமண்டத்தில் நித்த விநோத வளநாட்டிலுள்ள ஆவூர்க் கூற்றத்து ஆவூரில் வாழ்ந்த தலைவனுமாகிய கண்ணன் ஆரூரன் என்பான். நித்த விநோத வளநாடு என்பது முதல் இராஜராஜ சோழன் காலத்தில் சோழமண்டத்திலிருந்த ஒன்பது வளநாடுகளுள் ஒன்றாகும். சோழமண்டலம் முதல் இராஜராஜசோழனது ஆட்சிக் காலத்திற்கு முன்னர், பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததேயன்றி வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கவில்லை . முதல் இராஜராஜனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில்தான் சோழமண்டலம் இராஜேந்திர சிங்கவளநாடு, இராசாச்ரய வளநாடு, நித்த விநோத வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு, அருண்மொழிதேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்ற ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வளநாடும் பலநாடுகளைத்

  • இவ்விடத்தில் நெல்லையுணர்த்தும் குறியுள்ளது.