72 இவனது பேரனுடைய புதல்வனான முதல் பரமேச்சுரவர்மன் பெரும்பிடுகு என்ற பட்டம் எய்தியவன் என்பது கூரத்துச் செப்பேடு களால் அறியப்ப டுகின்ற து. (South Indian Inscriptions Volume I page 154.) கி.பி. 830 முதல் 854 வரையில் ஆட்சிபுரிந்த தெள்ளாறெறிந்த நந்திவர்மன் விடேல் விடுகு என்ற பட்டமுடையவன் என்பது நந்திக் கலம்பகத்தால் புலப்படுகின்றது. இவனது தந்தையாகிய தந்திவர்மனே மாற்பிடுகு என்னும் பட்டத்துடன் நிலவியன். எனவே கி.பி. 785 ஆம் ஆண்டில் திருவெள்ளறையில் கம்பன் அரையன் என்னும் தலைவனால் அமைக்கப்பெற்ற மாற்பிடுகு பெருங்கிணறு கி.பி - 780 முதல் 830 வரையில் அரசாண்ட பல்லவ வேந்தனாகிய தந்தி வர்மனது பட்டப் பெயரால் அக்காலத்தில் வழங்கப்பெற்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு வெளியாதல் காண்க. இராசராசன் கிணறு இராசராசன் கிணறு என்பது காஞ்சிமா நகரிலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் பெருவழியில் மாமண்டூருக்குத் தெற்கே ஐந்துகல் தூரத்திலுள்ள உக்கல் என்ற ஊரில் மேலைப்பெருவழியிலுள்ளது. இக்கிணற்றின் வரலாற்றை அவ்வூரிலுள்ள புவனி மாணிக்க விஷ்ணு கிரகம் என்னும் பெயருடைய திருக்கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு நன்கு விளக்குகின்றது. அதனை அடியிற் குறிக்கின்றேன். 1. ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியுந் நுளம்ப பாடியுந் தடிகைபா 2. டியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டொழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டப்பாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல் வென்றித் தண்டாற் 3. கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ ராஜகேஸரி வன்மரான ஸ்ரீராஜராஜ தேவர்குயாண் 4. டு உ கூ ஆவது ஐயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீவிக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்து மேலைப் 5. பெருவழியில் ஸ்ரீராஜராஜதேவர் திருநாமத்தால் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் பணிமகன் சோழ மண்டலத்து தென்கரை நாட்டு நித்த