பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



77 உரையின் வரையும் பொருளின் அளவும் இருவகைப்பட்ட எல்லையுங் கடந்து தம்மை மறந்து நின்னை நினைப்பவர் செம்மை மனத்தினுந் தில்லைமன் றினும்நடம் ஆடும் அம்பல வான ! நீடு குன்றக் கோமான் தன்திருப் பாவையை நீலமேனி மால்திருத் தங்கையைத் திருமணம் புணர்ந்த ஞான்று பெரும ! நின் தாதவிழ் கொன்றைத் தாரும், ஏதமில் வீர வெள்ளிடைக் கொடியும், போரில் தழங்குந் தமருகப் பறையும், முழங்கொலித் தெய்வக் கங்கை யாறும், பொய்தீர் விரையாக் கலியெனும் ஆணையும், நிரைநிரை ஆயிரம் வருத்த மாயிரு மருப்பின் வெண்ணிறச் செங்கண் வேழமும், பண்ணியல் வைதிகப் புரவியும்,- வான நாடும், மையறு கனக மேருமால் வரையிஞ், செய்வயல், தில்லையாகிய தொல்பெரும் பதியுமென் றொருபதி னாயிரந் திருநெடு நாமமும், உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின் தமர்பெயர் எழுதிய வரிநெடுங் புத்தகத் தென்னையும் எழுத வேண்டுவன் நின்னருள் ஆணை வைப்பிற் காணொணா அணுவும் வானுற நிமிர்ந்து காட்டுங் கானில்லால் நுளம்புங் கருடனா தலினே : - என்பதாம். சிவபெருமானுக்குத் தசாங்கம் கூறவந்த அடிகள், 'பொய் நீர் விரையாக்கலியெனும் ஆணையும்', என்று தீஞ்சுவை யொழுகும் அவ்வாசிரியப்பாவில் அவ்விறைவனது ஆணையின் திருப்பெயரைக் குறித்திருப்பது அறிந்துகொள்ளுதற்குரியதாகும். இனி, திருப்புறம்பியத்திலுள்ள திருக்கோயிலிலிருந்து யாம் எழுதிவந்த அக்கல்வெட்டுக்கள் மூன்றும் சரித ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன்படுமாதலின் அவற்றை அடியில் வரைகின்றேன்.