78 Jா 1. முதல் இராசராசசோழன் காலத்தியது (1) ஸ்வஸ்திஸ்ரீ கோ ராஜராஜகேசரி வன்மற்கு யாண்டு ஆவது ஸ்ரீதிருப்புறம்பியமுடைய மகாதேவர்க்குத் திரு - (2) மஞ்சன நீராடியருள ஸ்ரீகண்டன் மதுராந்தக் தேவரான ஸ்ரீஉத்தம சோழ தேவர்க்காக இ(த்) தேவரை (3) த் திருவயிறு வா(ய்)த்த உடைய பிராட்டியார் தந்த வெள்ளிக் கலசம் ஒன்று அல்குநிலை தூற்று நாற்பத்துமு (4) க் கழஞ்சே முக்காலே இரண்டு மஞ்சாடி, இதுக்கு விரையாக் கலி யென்னுந் நிறைகோலால் நிறை (5) பதின்மூன்றெழுக்கை ஒரு பலம் பதின்கழஞ்சே காலாக இவ்வூர்க் கல்லால் விற்ற (6) நிறை நூற்றுநாற் பதின்கழஞ்சே முக்காலே மூன்று மஞ்சாடியும் அறுமா இவைபன் (7) மாகேஸ்வர ரக்ஷை. 2. கங்கைகொண்ட சோழன் காலத்தியது ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னிவள ரிருநில மடந்தையும் போர்செயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந் தன்பெருந் தேவிய ராகி இன்புற நெடிது யரூழியு ளிடைதுறை நாடுந் தொடர் வனவேலிப் படர்வன வாசியுஞ் சுள்ளிச் சூழ்மதிட் கொள்ளிப் பாக்கமு நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகட வீழத் தரைசர்த முடியு மாங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர்பக்கல் தென்னவர்வைத்த சுந்தர முடியு மிந்திர னாரமும் தென்றிசை ஈழ மண்டல முழுவதும் எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடுங் குலதன மாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவற் பலபழந் தீவும் செருவிற் கினவி இருபத் தொருகால்