உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



81 (6) ஆட்கொண்ட நாயகன் விண்ணப்பஞ் செய்து உடையார் திருப்புறம்பிய முடையாரும் ஆளுடைய நாச்சியாரும் (7) சென்னெல் அமுது செய்தருளப்பண்ணி அமுது செய்து வருகையால் பின்பு உள்ளு ...... எழுந்தருளியிருக்குந் தேவர்க (8) ள் அமுது செய்வது.... பூரியே சந்திராதித்தவல் அமுது செய்தருளப் பண் (9) ணவே ணுமென்று திருப்புறம்பியத்தில் வெள்ளாளரையும் குலோத்துங்க (10) சோழமங்கலத்து காணியாளரையும் வெள்ளாளரையும் மற்றும் புறம்புள்ள தேவதான (11) த்துக் காணியாளரையும் வேண்டிக்கொள்ள இப்படி இவர்கள் சம்மதித்து இந்நெல்லு (12) அளக்க இசைந்திட்டு இட்டமையில் சென்னெல்லும் வெள்ளையுமல்லது பூரி (13) அமுது செய்விப்பார் - திருவாணை திருவிரையாக்கலி - இது பன்மாசேஸீவரரக்ஷை. விடேல் விடுகு காஞ்சிமாநகரைத் தலைநகராக் கொண்டு தொண்டை மண்டலத்தையும் சோழமண்டலத்தையும் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர் களுள் தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என்பவனும் ஒருவன் ஆவன். சரித ஆராய்ச்சியாளர்கள் அவனை மூன்றாம் நந்திவர்மன் என்பர். அவன் கி.பி.830 முதல் 854 வரை அரசாண்டவன். தற்காலத்தில் வெளிவந்துள்ள பாரதவெண்பா அவ்வேந்தன் காலத்தில் எழுதப் பெற்றதாகும். அதன் ஆசிரியர் பாயிரத்தில் அவனைப் புகழ்ந்து ஒரு வெண்பா கூறியிருத்தலோடு 'பல்லவர் கோமான் புண்டிதராலயன்' என்னும் உரைநடையில் அவனைப் பாராட்டியுள்ளனர். சிறந்த செந்தமிழ்ப் புலமையும் ஒப்பற்ற சிவபத்தியும் வாய்ந்த அவ்வேந்தன் புலவர் பெருமக்கள் பால் பேரன்பு பூண்டு அன்னோரைப் பெரிதும் ஆதரித்து வந்தான். அவன் காலத்தில் நிலவிய புலவர் பெருமான் ஒருவர் அவன்மீது ஒரு கலம்பகம் பாடியுள்ளார். அது நந்திக் கலம்பகம் எனப்படும். கலம்பகங்களுள் மிகவும் பழமை வாய்ந்தது அதுவேயாகும். அந்நூல் அவ்வேந்தனை 'அவனி நாராயணன்' எனவும், 'மல்லை வேந்தன்' எனவும், 'மயிலைகாவலன்' எனவும், 'விடேல்விடுகு' எனவும் புகழ்ந்து கூறுகின்றது. அவற்றுள், விடேல் விடுகு என்னும் சொற்றொடர் மூன்று பாடல்களில் வந்துள்ளது. அப்பாடல்களுள் ஒன்று, ‘நெஞ்சா குலமுற்றிஙனே மெலிய நிலவின்கதிர் நிளெரியாய் விரியத் துஞ்சா நயனத்தொடு சோருமிவட் கருளா தொழிகின்றது தொண்டைகொலோ செஞ்சாலி வயற்படர் காவிரிசூழ் திருநாடுடை நந்திசினக் கலியின் - வெஞ்சாயன் மறைத்த தனிக்குடையான் விடை மண் பொறி யோலை விடேல்விடுகே' (நந்திக்கலம்பகம், பா.11)