உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



83 பாடுவித்தவனும் தெள்ளாறு எறிந்தவனும் ஆகிய நந்திவர்மன் என்பவன். ஆகவே, நந்திக்கலம்பகத்திலும் கல்வெட்டுக்களிலும் பயின்றுவரும் விடேல்விடுகு என்னும் தொடர்மொழி முற்காலத்தில் பல்லவ அரசர்களது ஆணையைக் குறித்தமை நன்கு புலப்படுத்தல் காண்க.