பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 & சு. சமுத்திரம் ஆதரவாகக் கேட்டாள். கனகம்மாவால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. இந்த ஐம்பது வயதில், அவள் கணவ ராகட்டும். பிள்ளையாகட்டும், இப்படி ஒரு தடவை கடக் கேட்டதில்லை. இவள் பழகிய ஐந்து நிமிடத்தில் கேட்கக் கூடியதைக் கேட்டுட்டாளே! பெரியவனைப் பாசமில்லாத வன்னு நினைச்சது எவ்வளவு தப்பு? இவள் கிட்ட என்னோட கஷ்டத்த சொல்வியிருக்கானே! கனகம்மா சிந்தித்துக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. சுக்கைத் தட்டிச் சாப்பிடச் சொன்ன மோகினியின் கன்னத் தைச் சுக்காக நினைத்து தடவிக்கொண்டிருந்தாள். மோகினி அவளிடமிருந்து விடுபட்டுக்கொண்டே, 'மாமா எங்கேத்த இருக்கார்...' என்றாள். "அவர் ஒரு தனிப்பிறவி, எதையாவது ஒண்ணைச் செய்தார்னா அதையேதான் செய்துகிட்டிருப்பார். இடை யில என்ன வந்தாலும் அசையமாட்டாரு!" இைப்போ என்ன பண்றார்?' எதையாவது பண்ணுவார். வா! அவருகிட்ட போக லாம். கண்ணில துளசிமாதிரி இருக்கு. தட்டிவிடும்மா...' மோகினியும், கனகம்மாவும் வராந்தாவின் ஒரத்தை ஒட்டியிருந்த அறைக்குள் நுழைந்தபோது, அருணாசலம் எதையாவது பண்ணாமல் இவர்கள் என்ன பண்ணுகிறார் கள் என்பதைக் கவனித்துக்கொண்டு நிற்பவர்போல், கதவிடுக்கில் கண்களை விட்டுக்கொண்டு நின்றார். அவர் களைப் பார்த்ததும், கட்டிலை ஒட்டிப் போட்டுக்கொண் டிருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தார். அறுபது வயதுக்காரர். இளமையில் ஆடாமல் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை மட்டுமே ஆடியதைக் காட்டும் கட்டு மஸ்தான உடல், பனியனுடன் அவர் நின்ற தோரணை, யாருடனோ சண்டைக்குப் போகப்போகிறவர் போல் தோன்றியது.