பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 111 சிரமம்' என்கிற வார்த்தைகள் அவன் காதில் விழாதது வருத்தத்தைக் கொடுத்தது. அதேசமயம் உங்களால் எனக்குச் சிரமம்' என்று சொல்லாதது சிறிது மகிழ்ச்சி யையும் கொடுத்தது. ஒரே கட்டிலில் இருவரும் பிரிந்து படுத்தார்கள். இருவருக்கு மத்தியிலும், கண்ணுக்குப் புலப்படாத அதே சமயம் துல்லியமாகத் தெரிந்த குறுக்குச் சுவரை இருவரும் பார்த்துக்கொண்டார்கள். பத்து பதினைந்துநாள் ஒடியது. சீனிவாசனின் தந்தை எதிர் நோட்டீஸ் அனுப்பி யிருந் தார். கோர்ட்டுக்குப் போகவேண்டுமானால் முதலில் ஐந் நூறு ரூபாயை எண்ணிக் கொடுக்க வேண்டும் என்று வக்கீல் சொல்லிவிட்டார். பணம் இல்லாமல் இரண்டு மூன்று மாதங்கள் ஓடின. மோகினி சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து. இருநூறு ரூபாயை கணவனிடம் நீட்டினாள். அவன் எச்கீலிடம் போக, அவர் திரும்பிப் பார்க்காமல் ஒடு" என்று சொன்னதை, கணவன் காரன மனைவியிடம் சொன்னான். மோகினி அவனோடு பே ய் வக்கீலைப் பார்த்தாள். வக்கீல் நூறு ரூபாய்க்கே சம்மதிப்பதுபோல் தெரிந்தது. கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மோகினிக்கு ஒன்று புரிந்தது. இந்தப் புருஷனையோ இந்தக் கோர்ட்டையோ நம்பி வாழ முடியாது. மூன்று மாத கருவாக இருக்கும் அவள் குழந்தையை எப்படியும் ஒகோன்னு வளர்க்க வேண்டும். எப்படி? ஏழைப் பெண் என்றவுடனே மோசமாகப் பார்க்கும் மே சக்கார ஆண்களிடம் மோசம் போகாமலே முன்னுக்கு வரமுடியும் எனபதை, ஐந்நூறு கேட்ட வக்கீல், இரு நூறு ரூபாய்க்கும் ஒரு சின்ன புன்னகைக்கும் விலையாகிவிட்டதி லிருந்து புரிந்துகொண்டாள்.