பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சு. சமுத்திரம் உட்காரச் சொல்லி, விஷயத்தைக் கேட்டார். விஷயம் தெரிந்ததும் அவள் கொடுத்த பிரஷ்ஷரில் அவருக்கு பிளட் பிரஷ்ஷர் ஏறியது. பெல்லடித்து, பியூனை அனுப்பி லீலாவை வரவழைத்தார். அவளை உட்காரச் சொல்லவில்லை. உட்கார்ந்திருந்த மோகினியைச் சுட்டிக்காட்டி, நியா யத்தை (பத்திரிகையின் பெயர்) இவளே பாத்துக்கறப்போ நீ ஏன் அனாவசியமா இண்டர்பியர் பண்றே? நீ பாஸா நான் பாலா? ஐ லே யூ கீப் குயட். டோண்ட் போக் யுவர் நோஸ், யூ கேன் கோ நெள...' என்று கத்த, திருப்பிக் கத்தலாமா என்று நினைத்த லீலா, உதடுகளைக் கடித்துக்கொண்டு, நீர் சிந்தாமல் இருக்க இமைகள் நின்ற இடத்திலேயே நிறுத்தி பாலன்ஸாக வைத்துக்கொண்டு வெளியே போன போது, இளைப்பாறுபவர்போல் கத்திக் களைத்த சுந்தரம் உள்ளே இருந்தவளின் தோளில் கைபோட்டார். லீலா கீழே: விழாமல் இருப்பதற்காக வெளியே வந்து மேஜையைப் பிடித்துக் கொண்டாள். ஒறிது நேரத்திற்குப்பிறகு, தோளில் கிடந்த புடவைத் தலைப்பைச் சரி செய்துகொண்டு. அட்டகாசமாக வந்த மோதினி, அப்பாவிற்கு உற்சாகமாகப் போன் செய்த ள். ..அப்பா வேவைக்காரியைப் பாயசம் வைக்கச் சொல்லுங்க. ஒரு நல்ல நியூஸ். சரியான சவுக்கடி என்கிட்டயா, முடியும்? என்னப்பத்தி இன்னும் தெரியல. ஹா...ஹா... ஹெ...ஹே...அப்புறமா, வீட்ல வந்து சொல்றேன, வச்சிடட் டுமா?' என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். பிறகு இன்னொரு நம்பரைச் சுழற்றினாள். இன்ஸ்பெக்டர் வில்லியம்ஸ் இருக்காரா? யோவ் நான் யாராய் இருந்தா ஒனக்கென்னய்யா! ஐ லே யு ஸிம்ப்ளி கிவ் இட் டு ஹிம்... லோ. மிஸ்டர் வில்லியம்ஸ்ா...எங்க ஆபீஸ் கல்சுரல் அகடாமில சினிமா நடிகர் சிங்காரத்த கொண்டு வாறோம். கொஞ்சம் பாதுகாப்பு வேனும், ஒங்க சப்-இன் ஸ்பெக்டரை என் வீட்டுக்கு அனுப்புறீங்களா? என்ன. நீங்களே வாரிங்